உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி.,யில் மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவோம்: அகிலேஷ் திட்டவட்டம்

பார்லி.,யில் மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவோம்: அகிலேஷ் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: பார்லி.,யில் மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவோம் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.பா.ஜ., ஆளும் உ.பி.,யின் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஆக அகிலேஷ் யாதவ் இருந்து வருகிறார். உ.பி.யின் மெயின்புரி மாவட்டத்தின் கர்ஹால் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் அகிலேஷ் இருந்தார். திடீரென தன் முடிவை மாற்றிய அகிலேஷ் யாதவ், லோக்சபா தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் வெற்றி பெற்று, அகிலேஷ் எம்.பி ஆனார். இதனால் அவர் எம்.எல்.ஏ., பதவியை இன்று(ஜூன் 11) ராஜினாமா செய்தார்.

பிரச்னைகள்

பின்னர் நிருபர்கள் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: பார்லி.,யில் மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவோம். உ.பியில் 2027ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதே அடுத்த இலக்கு. இப்போது இருந்து அதற்கான பணிகளை கட்சியினர் துவங்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற, சமாஜ்வாதி கட்சிக்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி.

3வது இடம்

தற்போது நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக சமாஜ்வாதி உருவெடுத்துள்ளது. எதிர்மறை அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. இம்முறை கடும் வெயிலிலும் பணியாற்றிய கட்சியினருக்கு நன்றி. இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார். பா.ஜ., அரசை வீழ்த்துவதற்காக எம்.பி பதவியை அகிலேஷ் யாதவ் தக்க வைத்து கொண்டுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

S. Neelakanta Pillai
ஜூன் 12, 2024 20:56

இப்பதான் மக்கள் பிரச்சினையை பற்றி பேச போறாங்க அப்படின்னா இதுவரைக்கும் ஆட்சியில் இருக்கிற போது இவங்க செஞ்சது எல்லாமே சொந்த பிரச்னை தான். இப்போதும் ஒழுங்காக மக்கள் பிரச்சனை பற்றி பேசாமல் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக இருந்தால் அடுத்த முறை இந்த வாய்ப்பும் கிட்டாது என்பதை நினைவில் கொள்வது நலம்.


sankaranarayanan
ஜூன் 11, 2024 20:28

பார்லி.,யில் மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவோம் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதைவிட வேறு என்னைய்யா உனக்கு அங்கே வேலை இதை சொல்ல வேண்டுமா செய்து காண்பியுங்கள்


Sridharan Venkatraman
ஜூன் 11, 2024 20:05

நாங்க பார்லிமென்ட் வேற எதுக்கோ இருக்குன்னு நினைச்சோம்...


M Ramachandran
ஜூன் 11, 2024 19:33

அப்போர் ஓவ்வொரு முறை பாராளுமன்றம் கூடும் போதும் அவர்களய் தேர்ந்தெடுத்த மக்கள் பெருமைஅடையும் வகையில் மத்திய மண்டபத்தில் நடனம் கூத்து நடத்தி காட்டு வார்கள்.


Kumar
ஜூன் 11, 2024 19:15

நீங்க ஆமா எந்த மக்களுக்கு


பேசும் தமிழன்
ஜூன் 11, 2024 19:08

பாராளுமன்ற கேண்டீனில் போய் அமர்ந்து கொண்டு இட்லி.... வடை சாம்பார் சாப்பிடுவோம் என்று வேண்டுமானால் கூறலாம்.


sankar
ஜூன் 11, 2024 18:58

சகுனிகளை ஏற்கெனெவே சந்தித்து - வீழ்த்தி இருக்கிறது பாரதம் -


Madhavan
ஜூன் 11, 2024 18:46

முதலில் கூச்சலிடாமல், சபாநாயகர் இருக்கையை நோக்கிப் பாயாமல், வெளி நடப்பு செய்யாமல், ஆக்க பூர்வமான விவாதங்களில் ஈடுபடக் கற்றுக் கொள்ளுங்கள்... மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர்.


Raj
ஜூன் 11, 2024 17:10

மக்கள் பிரச்சனைகளை எழுப்ப தான் பார்லிமென்ட் அல்லாமல் சினிமா கதைகளை பற்றி பேசுவதற்கு அல்ல.. ஏதோ புதிதாக கூறுகிறார். அப்போ தானே வெளிநடுப்பு செய்யமுடியும்.


S. Narayanan
ஜூன் 11, 2024 17:09

Atleast do that job


மேலும் செய்திகள்