உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஜாமின்

மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஜாமின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : மதுபான கொள்கை வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லி கோர்ட் ஜாமின் வழங்கியது.மதுபான கொள்கையில் பண மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் மார்ச் 21ல் கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கில், லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 2ல் மீண்டும் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் ஜாமின் கோரி டில்லி கோர்ட்டில் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மீது ஏற்கனவே இரு தரப்பு விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று (20.06.2024) ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும் அவர் நாளை (21-ம் தேதி) திஹார் சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் பிணை தொகை செலுத்திய நிலையில் கெஜ்ரிவாலை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க நீதீபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ramani
ஜூன் 21, 2024 12:08

ஊழல்வாதிகளுக்கு ஊழல்வாதி என்று தெரிந்தும்ஜாமீன் தருவது நீதிமன்றம் மேல் உள்ள நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் வருகிறது.


sankaran
ஜூன் 21, 2024 11:08

நீதிமன்றங்களுக்கு கடிவாளம் அவசியம். இஷ்டத்துக்கு ஜாமீன் தருவது தான் குற்றங்கள் பெருகக் காரணம்


Alagusundram KULASEKARAN
ஜூன் 21, 2024 09:54

டெல்லி உயர் நீதிமன்றமே டெல்லி முதல்வராக இருப்பவர் மதுபான ஊழல் வழக்கில் குற்றச்சாட்டபட்டு சிறையில் இருப்பவரை எந்த அடிப்படையில் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செயதது அவர் சாட்சி ஆதாரங்களை அழிக்க முடியாதா எந்த நீதிபதி வழங்கினார் அவரை ஜாமீனில் விடுதலை செய்தது தவறு


Shivaji Nr
ஜூன் 21, 2024 09:02

இரு தரப்பிலும் நன்கு விசாரித்து, அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றத்திற்கு பாராட்டுக்கள். நாட்டிற்காகவும் மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து நற்பணியாற்றிட நல்வாழ்த்துக்கள்.


Shivaji Nr
ஜூன் 21, 2024 08:53

நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நாட்டிற்காகவும் மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து உழைக்க வாழ்த்துக்கள். வாய்மையே வெல்லும். நல்லவன் வாழ்வான்.


கூமூட்டை
ஜூன் 21, 2024 12:09

நல்லவர் , கொள்ளை அடிக்க தொழில்நுட்ப பண்புகள் கொண்ட இந்த நபர்கள் உள்ளே இருக்க வேண்டும். காலம் கலிகாலம்.


a.s murthy
ஜூன் 21, 2024 05:01

உயர்மட்ட நீதிமன்ற அமைப்பில் உள்ளிருக்கும் .... நாட்டில் மூத்த வக்கீல் வகையராக்களில் உள்ள இணைப்பு. சிட்டிங்குக்கு பல லட்சங்கள் கைமாறலாம்.


R Kay
ஜூன் 21, 2024 03:06

உபிக்கள் குதூகலிக்க வேண்டாம். கிடைத்தது வெறும் ஜாமீன் மட்டுமே. வழக்கு முடியும்வரை தீர்ப்பு வரும்வரை ஜாமினில் வெளியில் உலாவும் குற்றவாளிகள் குற்றவாளிகளே.


தாமரை மலர்கிறது
ஜூன் 20, 2024 22:49

இந்த அக்கப்போர் பேர்வழியை வெளியே விட்டது மிகப்பெரிய தவறு என்று மத்திய அரசு நினைக்கும்படி இவரது செயல் இருக்கும். உடனடியாக அடுத்த கேசில் கெஜ்ரி உள்ளே போவார் என்பதில் சந்தேகமில்லை.


Kasimani Baskaran
ஜூன் 20, 2024 22:23

நீதிமன்றத்தின் செல்லப்பிள்ளை ஜெயிலுக்குள் முதல்வராக இருக்க முடியுமே தவிர ஜாமீனில் முதல்வராக செயல்பட முடியாது.


r ravichandran
ஜூன் 20, 2024 21:10

இவர்களுக்கு மட்டும் ஜாமின் எப்படி உடனடியாக கிடைத்து விடுகிறது என்று புரியவில்லை.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை