உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா தேர்தல் ரிசல்ட் பிரதமர் மோடி புது விளக்கம்

லோக்சபா தேர்தல் ரிசல்ட் பிரதமர் மோடி புது விளக்கம்

புதுடில்லி : இத்தாலியில் நடந்த ஜி -- 7 மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய மோடி, 'இந்திய தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த ஜனநாயக உலகிற்கும் கிடைத்த வெற்றி' என கூறினார். இத்தாலி பயணத்தை முடித்த அவர் நேற்று காலை நாடு திரும்பினார்.ஜி - 7 நாடுகளின் உச்சி மாநாடு, ஐரோப்பிய நாடான இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் கடந்த மூன்று நாட்களாக நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். தன் உரையில், 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது, அனைவருக்கும் மலிவு விலையில் எரிசக்தி கிடைக்கச் செய்வது, 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவதில் உறுதியுடன் இருப்பது, கார்பன் உமிழ்வை குறைக்க எடுத்து வரும் முயற்சிகள் குறித்து பேசினார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் குறித்து பிரதமர் தன் உரையில் கூறியதாவது: இந்தியாவில் நடந்த லோக்சபா தேர்தலில் 50 லட்சம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 64 கோடி மக்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்தினர். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் வாயிலாக தேர்தல் செயல்முறை வெளிப்படைத்தன்மை உடையதாகவும், நியாயமானதாகவும் மாற்றப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தேர்தலின் முடிவு சில மணி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. இது ஜனநாயகத்தின் தாய் என்ற எங்களின் பண்டைய மதிப்பீடுகளுக்கான உதாரணம்.இந்த வரலாற்று வெற்றியின் வாயிலாக இந்திய மக்கள் எனக்கு வழங்கிய ஆசியை ஜனநாயகத்தின் வெற்றியாக கருதுகிறேன். இந்த தேர்தல் முடிவு, ஒட்டு மொத்த ஜனநாயக உலகிற்கும் கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் பேசினார்.அதைத் தொடர்ந்து, இத்தாலியில் இருந்து புறப்பட்டு நேற்று காலை டில்லி வந்தடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

K.n. Dhasarathan
ஜூன் 22, 2024 22:01

வழக்கமான காமெடியில் கலக்கியுள்ளார், ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்கிறார், இவர் எப்போ ஜனநாயகவாதி ஆனார் ? ஓ ஓ கூட்டணி அப்படி பேச வைத்ததோ ? நல்ல விஷயம் தான், அப்புறம் எரிபொருள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்கிறாரே , எங்கே ? சமீபத்துமாக வெளிநாடு போனார் அங்கேயா? இருக்கலாம் நம் நாடு பற்றித்தான் அவருக்கு தெரியுமே


Kannan Soundarapandian
ஜூன் 16, 2024 16:17

உணர்வு பூர்வமாக பேச பார்க்கிறார். மேலும் விரிவாக பேசவில்லை.


முருகன்
ஜூன் 16, 2024 07:09

பல முகங்களையும் காட்ட வேண்டி இருந்தது


Appan
ஜூன் 16, 2024 06:59

EVM, இந்திரா காலத்தில் கொண்டு வரப்பட்டது .இதில் இவர் என்ன செய்தார் ?


ஆரூர் ரங்
ஜூன் 16, 2024 08:59

அப்போ இந்திரா கொண்டு வந்த EVM ஐத்தான் அவரது பேரன் எதிர்க்கிறார். அடப்பாவமே.


Rajamani K
ஜூன் 16, 2024 09:42

இந்திரா காலத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி இல்லை. சேஷன் காலத்தில் ஈ வி எம் வந்தது


V RAMASWAMY
ஜூன் 16, 2024 09:52

இந்தியாவில் கொண்டுவரப்பட்டது தானே, அவர் இந்தியர் இல்லையா, பெருமைப்படுகிறார், அந்த பெருந்தன்மையை பாராட்டாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று அவலப்படுத்தாதீர்கள், அதுவும் மூன்றாவது முறையாக பதவியேற்றிருக்கும் பாரத நாட்டின் பிரதமரை.


GoK
ஜூன் 16, 2024 10:05

சர்ச்சை ஈ வி எம் யாரால் கொண்டுவரப்பட்டது என்பதில்லை அதில் மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு ஆர்வமும் கிடையாது அவர்களுக்கு எப்படி அவர்கள் அடிமையாகி ஆண்டு நாடு பின்தங்கிய நாடு படிப்பு பணம் இவற்றில் ஒன்றுமில்லாத ஒன்று இத்தனை மக்கள் அப்படியும் ஒரு தேர்தலை நடத்தி ஜனநாயகம் சாகிறது என்ற ஒப்பாரிக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்பதுதான். அதில் இங்கிருக்கும் உள்ளிருந்தயே குழி பறிக்கும் கூட்டங்களுக்கும் மிக வருத்தம். அதிலும் மோடியே திரும்ப பிரதமர் ஆனது இன்னும் வருத்தம் கோபம் வெறி ...என்ன செய்வது முயற்சி செய்யுங்க இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு பாக்கலாம்


Abhivadaye
ஜூன் 16, 2024 06:43

பிபிசி, சி என் என், நம்ம ஊர் மீடியாக்கள் யாரும் ஈ வி எம் மேல சந்தேகம் இல்லாம இருக்கீங்களே?


VENKATEAN V. Madurai
ஜூன் 16, 2024 05:00

டிஜிட்டல் மயமான இந்தியாவில் ஓட்டுப் பதிவு முறை இன்னும் டிஜிட்டலுக்கு மாற வேண்டும் எங்கிருந்தாலும் வீட்டிலிருந்து ஓட்டளிக்கும் முறை வரவேண்டும்


Gandhiraj R
ஜூன் 16, 2024 14:10

தீர்வு: எங்கிருந்தும் வோட்டை செய்யலாம்: ஆதார் - பயோமெட்ரிக் - உயர்தர செக்யூரிட்டி பயன்படுத்தி, இன்டர்நெட் வெப்சைட் / மொபைல் ஆப் + தற்போதைய நடைமுறை .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை