உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா தற்காலிக சபாநாயகர் நியமனம்

லோக்சபா தற்காலிக சபாநாயகர் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் தற்காலிக சபாநாயகராக பர்த் ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ. மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி மூன்றாம் முறையாக கடந்த 9-ம் தேதி பதவியேற்றார். புதிய லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர், 24ல் துவங்கி, ஜூலை 3ம் தேதி வரை நடைபெறுகிறது. 10 ஆண்டுகளுக்கு பின், கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் நாற்காலிக்கு, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் குறி வைத்துள்ளன.இந்நிலையில் பாராளுமன்ற புதிய லோக்சபா சபாநாயகரை தேர்வு செய்வதற்காக வரும் 24-ம் தேதி சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்குகிறது. 26-ம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து இன்று வெளியான தகவலில் லோக்சபா தற்காலிக சபாநாயகராக பர்த் ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டு ஜனாதிபதி உத்தரவிட்டு உள்ளார். ஒடிசா மாநில பா.ஜ. எம்.பியான இவர் புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Balu
ஜூன் 21, 2024 06:22

நீ தான் ஓட்டு கான்டீன்க்கு போட்டவன் ஆச்சே உனக்கு எதற்கு பாராளுமன்றம் பற்றி கவலை?


தாமரை மலர்கிறது
ஜூன் 20, 2024 23:06

பிஜேபி எம்பி தான் புதுசபாநாயகராக வருவார். ஒரு சிலர் நாயுடு எம்பி சபாநாயகர் என்று கட்டுக்கதையை அவிழ்த்துவிடுகிறார்கள் . அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் நாயுடு கள்ளமௌனம் காத்து வருகிறார். இரநூற்றிஐம்பது தொகுதிகளை ஜெய்த்துவிட்டு, நாயுடு அவரது எம்பியை சபாநாயகராக ஆக்கிக்கொள்ளலாம். அதுவரை நாயுடு அவரின் உயரமறிந்து நடந்துகொள்ள வேண்டும். சபாநாயக்கர் பதவி வானளாவிய அதிகாரம் கொண்டபதவி. ஒரே நாளில் நூற்றிஐம்பது எம்பிகளை சஸ்பெண்ட் செய்து மசோதாக்களை ஆளும்கட்சியால் நிறைவேற்றமுடியும். ஒவ்வொரு எம்பி எவ்வளவு மணிநேரம் பேசவேண்டும் என்ன பேசவேண்டும் என்று எல்லாவற்றையும் அவர் தான் நிர்ணயிக்கிறார். கட்சிகள் உடையும்போது, அவர் தான் முடிவெடுக்கிறார். அந்த பதவியை நாயுடுவிடம் கொடுத்துவிட்டு கைகட்டி நிற்க பிஜேபி அரசு அந்த அளவிற்கு அறிவிலி அல்ல. போ போ வேலையை பாரு.


Sck
ஜூன் 20, 2024 20:55

நல்ல தேர்வு.


மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி