மேலும் செய்திகள்
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
7 minutes ago
ஒரு கால பூஜைக்கு நிதி வழங்கல்
7 minutes ago
குட்கா விற்றவர் கைது
12 minutes ago
புதுடில்லி:ஆறாயிரம் கிலோ முந்திரி பருப்பு திருடியதாக லாரி டிரைவர் மற்றும் கிளீனர் கைது செய்யப்பட்டனர்.டில்லி லாரன்ஸ் சாலையில் முந்திரி ஆலை நடத்துபவர் அலோக் பாட்டியா. கடந்த 7ம் தேதி 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6,000 கிலோ முந்திரியை வாடகை லாரியில் ஏற்றி தன் வாடிக்கையாளருக்கு அனுப்பினார். ஆனால், அது சென்று சேரவில்லை. லாரி டிரைவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.இதையடுத்து, போலீசில் புகார் செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, ஆதர்ஷ் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே லாரியை கைப்பற்றினர். ஆனால், அதில் பாட்டியா ஏற்றி அனுப்பிய முந்திரிப் பருப்பு மூடைகள் இல்லை.இதைத் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் லாரி டிரைவர் முகமது சபீர், 24, கிளீனர் முகமது பைசான்,32, ஆகிய இருவரும் பிடிபட்டனர். இருவரிடமும் நடத்திய தீவிர விசாரணை நடத்தி, அவர்கள் அளித்த தகவல்படி டில்லியின் பல்வேறு இடங்களில் இருந்து 5,910 கிலோ முந்திரி மீட்கப்பட்டது.
7 minutes ago
7 minutes ago
12 minutes ago