உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.ஏ.ஏ., சட்டத்தை மம்தா தடுக்க முடியாது: அமித்ஷா சவால்

சி.ஏ.ஏ., சட்டத்தை மம்தா தடுக்க முடியாது: அமித்ஷா சவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: சி.ஏ.ஏ., சட்டத்தை மம்தா பானர்ஜியால் ஒருபோதும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சபதம் விடுத்துள்ளார்.மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: 4 கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவடைந்துள்ளது. மொத்தம் 380 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. மேற்கு வங்கத்தில் 18 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. 270 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு முழுப்பெரும்பான்மை உடன் வெற்றி கிடைத்துள்ளது.

குடியுரிமை

அயோத்தி ராமர் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழாவுக்கு, மம்தா பானர்ஜி மற்றும் ராகுலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஏன் பங்கேற்கவில்லை. அவர்கள் தங்கள் ஓட்டு வங்கியை கண்டு பயப்படுகின்றனர். சி.ஏ.ஏ., சட்டத்தை மம்தா பானர்ஜியால் ஒருபோதும் தடுக்க முடியாது. சிஏஏ சட்டத்தால், அனைவருக்கும் குடியுரிமை கிடைக்கும். மம்தா ஓட்டு வங்கி அரசியலுக்காக ஊடுருவலை ஆதரித்தார். இதனால் அவர் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sankaranarayanan
மே 14, 2024 20:50

அயோத்தி ராமர் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழாவுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டு, அதில் கலந்துகொள்ளாதவர்கள் பங்கேற்காதவர்கள் அரசியல்வாதிகள் அனைவரும் மக்களால் புறக்கணிக்கப்படவேண்டும் இது நமது நாட்டின் பாரதத்தின் புனித தன்மையை பெரிதும் பாதிக்கிறது


Syed ghouse basha
மே 14, 2024 18:57

அமித்ஷா நீங்க ஆட்சிக்கு வராமல் தடுக்க மக்களால் முடியும்


DARMHAR/ D.M.Reddy
மே 14, 2024 23:30

Syed ghouse basha அவர்களே உங்கள் கனவு "அமித்ஷா ஆட்சிக்கு வராமல் தடுக்க மக்களால் முடியும்" என்பது பாலைவனத்தில் கானல் நீர் போன்றது நீஙகள் பாகிஸ்தானுக்கு சென்று விடுவதே உமக்கு நல்லது


Syed ghouse basha
மே 14, 2024 18:49

மம்தாவால் தடுக்க முடியாது நீங்க ஆட்சிக்கு வருவதை மக்கள் தடுத்து நிறுத்தலாம்லே மிஸ்டர் அமித்ஷா


Easwar Kamal
மே 14, 2024 18:40

நாட்டுக்கு என்ன தேவையோ அது எதுவும் பண்ணீர்தேங்கா தேவை இல்லாத பண்ணுங்க அடுத்த வருஷம் இப்படிதான் போக போகுது இன்னமும் ஏதாவது கோவில் இருந்த கட்டுங்க மக்கள் வரி பணத்தை கொண்டு போய் குஜராத்தி தொழில் ADIBARUGALUKU வாரி இறங்க அப்ப அப்பா சீனா பாகிஸ்தானுக்கு சவால் விடுங்க உங்களை எதிர்க்கிறவனை அமலாக்கத்துறை வச்சு அள்ளிச்சுருங்க


GSR
மே 14, 2024 22:54

நாட்டுக்கு சுயமரியாதை தேவையில்லாதது சீனா பார்டரில் ரோடு தேவையில்லை மாறாக பாக்கிஸ்தானுக்கு இந்திய கரன்ஸி பேப்பர் தேவை காஷ்மீரில் ராணுவம் மீது கல் வெறியணும் நம் ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினாலும் அதை கொச்சைப்படுத்தணும் அந்த ஈஸ்வரனுக்கே வெளிச்சம்


ஆரூர் ரங்
மே 14, 2024 18:15

எவ்வளவோ இஸ்லாமிய கிறித்தவ நாடுகளில் CAA வை விட கடுமையான குடியேற்ற சட்டங்கள் உண்டு. ஆனால் அன்னிய மிஷனகளின் தூண்டுதலில் இங்கு CAA எதிர்ப்பு போராட்டம்?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை