உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காரைக்காலில் மாங்கனி திருவிழா பக்தர்கள் கனிகளை வீசி வழிபாடு

காரைக்காலில் மாங்கனி திருவிழா பக்தர்கள் கனிகளை வீசி வழிபாடு

காரைக்கால்:இந்த ஆண்டிற்கான மாங்கனி திருவிழா, கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது. மறுநாள் காலை காரைக்கால் அம்மையார் பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும், இரவு மணக்கோலத்தில் காரைக்கால் அம்மையார் பரமதத்தர் முத்து பல்லக்கில் வீதியுலா நடந்தது.நேற்று அதிகாலை பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகத்தை தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா நடந்தது.அப்போது வேண்டுதல் கொண்ட பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்து, பின் வீட்டின் மாடிகளில் இருந்து மாங்கனிகளை வீசி, 'ஓம் நமச்சிவாய' என கோஷமிட்டு வணங்கினர்.விழாவில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை