மேலும் செய்திகள்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு முன்னாள் நீதிபதிகள் 56 பேர் ஆதரவு
2 hour(s) ago | 30
அரசியல் கட்சியின் கருவியான தேர்தல் கமிஷன்; டி.கே. சிவகுமார் புகார்
3 hour(s) ago | 2
பகர்கஞ்ச்:ராஜேந்தர் நகர் ஐ.ஏ.எஸ்., கோச்சிங் சென்டர் மரணத்தைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் உள்ள அடித்தளம் உள்ள, ஆபத்தான நிலையில் தொங்கும் மின் கம்பிகளைக் கொண்ட கட்டடங்களை கணக்கெடுக்க எம்.சி.டி., எனும் டில்லி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக எம்.சி.டி., ஜூலை 29ல் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:எந்தவொரு கட்டடத்தின் அடித்தளத்திலும் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தனித்தனி வழிகளை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் வடிவால் வசதி உள்ளதா என்பது குறித்தும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.வடிகால் மற்றும் நடைபாதைகள் மீது உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, மழைநீர் வடிகால்களை முழுமையாக துார்வார வேண்டும். எந்த இடத்திலும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அதை சூப்பர் சக்கர் இயந்திரங்கள் மூலம் அகற்ற வேண்டும்.புதிய வடிகால் வசதி தேவைப்படும் இடங்களை அடையாளம் கண்டு, அதற்கான முன்மொழிவு உடனடியாக அனுப்ப வேண்டும்.அபாயகரமாக தொங்கும் மின்கம்பிகளை சம்பந்தப்பட்ட மின்வினியோக நிறுவனங்களுடன் இணைந்து உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழைக்காலத்தில் குப்பை அழுகி துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்கும் வகையில், விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மோசமான நிலையில் உள்ள சிறுநீர் மற்றும் கழிப்பறைகளின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த ஆய்வை அனைத்து மண்டல துணை ஆணையர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago | 30
3 hour(s) ago | 2