மேலும் செய்திகள்
பெரும் அவமானம்!
2 hour(s) ago | 1
பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி!
2 hour(s) ago | 1
தலைமை நீதிபதியை தாக்க முயற்சி சுப்ரீம் கோர்ட் அறையில் அதிர்ச்சி
3 hour(s) ago | 1
சிக்கபல்லாபூர், ஜூலை 15-வர மஹாலட்சுமி பண்டிகையை முன்னிட்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், வீடு வீடாக சென்று பெண்களுக்கு பரிசு வழங்கினார்.சட்டசபை தேர்தலில், சிக்கபல்லாபூர் தொகுதியில் பிரதீப் ஈஸ்வர், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட போது, தான் வெற்றி பெற்றால் ஆண்டு தோறும் வர மஹாலட்சுமி பண்டிகையில் பெண்களுக்கு சேலை பரிசளிப்பதாக, வாக்குறுதி அளித்திருந்தார். அவர் வெற்றி பெற்றார்.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற போன்று, கடந்தாண்டு வர மஹாலட்சுமி பண்டிகைக்கு, வீடு, வீடாக சென்று சேலைகள் வழங்கினார். தொகுதி முழுதும் 70,000 சேலைகள் வழங்கப்பட்டன.வரும் ஆகஸ்டில் வர மஹாலட்சுமி பண்டிகை வருவதால், பெண்களுக்கு சேலைகள் வழங்கி உள்ளார். ஒவ்வொரு பெண்ணுக்கும் சேலையுடன், வளையல், மஞ்சள், குங்குமம் போன்ற மங்கள பொருட்களை வழங்கினார். அது மட்டுமின்றி தன்னுடன் வந்த சிறுவர், சிறுமியருக்கு பணம் கொடுத்து இனிப்பு வாங்கி கொள்ளும்படி கூறினார்.பிரதீப் ஈஸ்வர் கூறியதாவது:ஆண்டு தோறும், வர மஹாலட்சுமி பண்டிகையின் போது, பெண்களுக்கு சேலை, மஞ்சள், குங்குமம் பரிசளிப்பதாக, நான் வாக்குறுதி அளித்திருந்தேன். அதன்படி அனைவருக்கும் பண்டிகைக்கு முன்னதாகவே, சேலைகள், மஞ்சள், குங்குமம் வழங்குகிறேன்.இதுவரை, 17 கிராமங்களில் வழங்கப்பட்டன. வெறும் சேலை மட்டும் வழங்கவில்லை. முத்தேனஹள்ளி சாலைக்கு, 4.5 கோடி ரூபாய் நிதியுதவி கொண்டு வந்தேன். விநாயகர் சதுர்த்திக்கு, சிறார்களுக்கு புத்தாடை வழங்குகிறேன். நான் அவர்கள் வீட்டு பிள்ளையாக இருப்பேன்.தொகுதி மக்கள், எனக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தனர். அவர்களுக்கு நன்றிக்கடன் தீர்க்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளும், இது போன்று மக்களுடன் இருப்பேன். சமூக சேவைக்கு ஆண்டு தோறும், 8 முதல் 10 கோடி ரூபாய் வேண்டும். நான் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை, மக்களுக்கு செலவிடுகிறேன்.அடுத்த தேர்தலை பற்றி, நான் ஆலோசிக்கவில்லை. ஒரு சகோதரனாக, மகனாக பணியாற்றுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago | 1
2 hour(s) ago | 1
3 hour(s) ago | 1