| ADDED : மே 11, 2024 09:45 PM
பெங்களூரு: மேலவை தேர்தலில் ஓட்டு போடுவோருக்கு, வலது கை ஆள் காட்டி விரலில் அழியா மை வைப்பதற்கு, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்த வாக்காளர்களுக்கு, இடது கை ஆள் காட்டி விரலுக்கு, அழியா மை வைக்கப்பட்டது.ஜூன் 3ம் தேதி, ஆசிரியர், பட்டதாரி தொகுதிகளுக்கு எம்.எல்.சி., தேர்தல் நடக்கிறது. இதில், ஏற்கனவே விண்ணப்பித்துள்ள பட்டதாரிகள், ஆசிரியர்கள் வாக்களிக்க தகுதி படைத்துள்ளனர்.இவர்கள் ஓட்டு போடும் போது, வலது கை ஆள் காட்டி விரலில் அழியா மை வைப்பதற்கு, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக, மைசூரில் இருந்து, மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் நிறுவனத்திடமிருந்து அழியா மை வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆறு எம்.எல்.சி., பதவிகளுக்கு நடக்கும் தேர்தலில், வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆனால், வாக்காளர்கள் பட்டியலில் உள்ள வாக்காளர்களுக்கு போன் செய்தும், நேரில் சந்தித்தும் தங்களுடைய கட்சிக்கு ஓட்டு போடும்படி அரசியல் கட்சியினர் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர்.