உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்ணீர் தொட்டியில் தாய், மகள் மர்மச்சாவு

தண்ணீர் தொட்டியில் தாய், மகள் மர்மச்சாவு

சித்ரதுர்கா, : சித்ரதுர்கா நகர் துருவகெரே சாலையின் திப்பே ருத்ரசுவாமி ஆசிரமத்தில் வசிப்பவர் சுரேஷ், 45. இவரது மனைவி கீதா, 40. இவர்களுக்கு ஒரு மகனும், பிரியங்கா 22 என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் ஆசிரமத்தில் உள்ள திப்பே ருத்ரசுவாமி கோவிலில், பூஜாரியாக பணியாற்றுகிறார்.சுரேஷும், அவரது மகனும் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்றிருந்தனர். இரவு வீடு திரும்பிய போது, மனைவி கீதாவையும், மகள் பிரியங்காவையும் காணவில்லை. பல இடங்களில் தேடினர். அப்போது ஆசிரம வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து, தாயும், மகளும் இறந்து கிடந்தது தெரிந்தது.இவர்களின் இறப்பு சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது. 'மன அழுத்தம் காரணமாக தாயும், மகளும் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம்' என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ