மேலும் செய்திகள்
பெரும் அவமானம்!
3 hour(s) ago | 1
பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி!
3 hour(s) ago | 2
தலைமை நீதிபதியை தாக்க முயற்சி சுப்ரீம் கோர்ட் அறையில் அதிர்ச்சி
4 hour(s) ago | 2
போபால், மத்திய பிரதேச அமைச்சரவை நேற்று விரிவுபடுத்தப்பட்டது. இதில் அமைச்சராக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான ராம்நிவாஸ் ராவத் பதவியேற்றார். பதவியேற்பில் ஏற்பட்ட குழப்பங்களால், 15 நிமிடங்களில் இரண்டு முறை அவருக்கு பதவிப் பிரமாணம் செய்யப்பட்டது.மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. ஏழு மாதங்களுக்குப் பின், மோகன் யாதவ் அமைச்சரவை நேற்று விரிவுபடுத்தப்பட்டது.விஜய்புர் தொகுதி எம்.எல்.ஏ.,வான ராம்நிவாஸ் ராவத்துக்கு நேற்று கவர்னர் மங்குபாய் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கவர்னர் மாளிகையின் சாண்டிபாணி அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், ராம்நிவாஸ் ராவத் பதவியேற்றார். அதன்பின் குழப்பம் ஏற்பட்டது. கேபினட் அமைச்சராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இணை அமைச்சராக பதவியேற்றது தெரிய வந்தது.'கேபினட் அமைச்சர்' என்பதற்கு பதிலாக, 'இணை அமைச்சர்' என கூறி அவர் பதவியேற்றதால் குழப்பம் ஏற்பட்டது. அதாவது, 'ராஜ்ய கே மந்திரி' என கூறுவதற்கு பதிலாக 'ராஜ்ய மந்திரி' என, கூறினார்.'இதைத் தொடர்ந்து, 15 நிமிடங்களுக்குப் பின், கவர்னர் மாளிகையின் தர்பார் அரங்கில் மீண்டும் பதவிப் பிரமாணம் நிகழ்ச்சி நடந்தது. இந்த முறை அவர் கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.ஆனால், இணை அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்யாமல், கேபினட் அமைச்சராக பதவியேற்றது, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.இதை விட பெரிய குழப்பம், அவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக தொடர்ந்து இருப்பது. லோக்சபா தேர்தலுக்கு முன், அவர் பா.ஜ.,வில் இணைவதாக அறிவித்தார்.ஆனால், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர், மாநில செயல் தலைவர் பதவிகளை அவர் ராஜினாமா செய்யவில்லை. மேலும், காங்.,கின் எம்.எல்.ஏ.,வாக தொடர்கிறார்.பா.ஜ.,வில் முறைப்படி சேராமல், காங்கிரசில் தொடர்ந்து இருக்கும் அவருக்கு, பா.ஜ., அரசில் அமைச்சர் பதவி அளித்து உள்ளது குழப்பத்தை ஏற்படுத்திஉள்ளது.
3 hour(s) ago | 1
3 hour(s) ago | 2
4 hour(s) ago | 2