உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவி, மாமியாரை கொலை செய்தவர் கைது

மனைவி, மாமியாரை கொலை செய்தவர் கைது

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கண்ணுார் அருகே குடும்பத்தகராறில் மனைவி மற்றும் மாமியாரை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். கேரளா மலப்புறம் மாவட்டம் வளஞ்சேரியைச் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது. மனைவி செல்மா 30. கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு செல்மா கண்ணூர் மாவட்டம் முழங்குன்று அருகே காக்காயம்காடு பகுதியில் உள்ள தாய் அலிமா 53, வீட்டுக்கு ஐந்து வயது மகன் பஹத்தையும் அழைத்து சென்றார்.நேற்று முன்தினம் செல்மாவின் தாய் வீட்டுக்கு ஷாகுல் ஹமீது சென்று மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆத்திரத்தில் மனைவியை கோடாரியால் வெட்டினார். இதை தடுக்க வந்த மாமியார் அலிமாவையும் வெட்டி சாய்த்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். சிறிது நேரத்தில் மனைவி, மாமியார் பலியாயினர். இந்த தாக்குதலில் மகன் பஹத்துக்கும் காயம் ஏற்பட்டது. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாகுல் ஹமீதை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

N.Purushothaman
ஆக 18, 2024 20:10

மதங்களை கடந்து பார்த்தால் கணவன் மனைவி இடையே இன்று பல குழப்பங்களும் மாற்றுக்கருத்துக்களும் அதனால் ஏற்படுகின்ற விடாப்பிடியான நிலைப்படும் குடும்பத்தை சீர்குலைக்கின்றன ....இதில் அணைத்து மதக்காரர்களும் ஒன்றே ...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2024 09:58

ஆகவே மகாஜனங்களே .... இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது என்று சங்கிகள் கூறுவது பொய் .....


Rihun
ஆக 18, 2024 14:51

பைத்தியக்காரத்தனம்


மேலும் செய்திகள்