உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை: சுப்ரீம் கோர்டில் கெஜ்ரிவால் பதில் மனு

என் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை: சுப்ரீம் கோர்டில் கெஜ்ரிவால் பதில் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்டில் கெஜ்ரிவால் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 'அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. என் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை' என மனுவில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ல் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 'டில்லி மதுபான கொள்கை ஊழலுக்கு தலைமை ஏற்று, சதி திட்டங்கள் தீட்டியதில் முக்கிய நபராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருந்துள்ளார். இந்த ஊழலில் அதிகம் பயன் அடைந்தது, ஆம் ஆத்மி கட்சி. 'எனவே, ஒரு குற்றத்திற்காக காரணத்துடன் ஒருவரை கைது செய்வது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறையை மீறுவதாகாது' என, சுப்ரீம் கோர்டில் அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது.

கெஜ்ரிவால் பதில் மனு

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 27) சுப்ரீம் கோர்டில் கெஜ்ரிவால் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், '' அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. என் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு ரூபாய் கூட ஊழல் செய்யவில்லை. மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லை'' என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

R Kay
ஏப் 28, 2024 02:16

எந்த திருடன் தன்னை திருடன் என்று ஒத்துக்கொண்டிருக்கிறான்?


sankar
ஏப் 27, 2024 21:37

அதை கோர்ட்டு சொல்லட்டும் தம்பி


Kasimani Baskaran
ஏப் 27, 2024 19:59

வழக்கு நடத்தி தண்டனை வாங்கிக்கொடுப்பதற்குள் விடிந்துவிடும் அதுவரை ஜாலியாக முதல்வர் பதவியில் இருந்து இன்னும் முடிந்தவரை லவட்டலாம் என்று திட்டமிட்டிருப்பது போல தெரிகிறது தண்டனை நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் குற்றவாளி மந்திரியாகவும், குற்றம் சாட்டப்பட இருக்கும் ஒரு நபர் முதல்வராக இருப்பதும் இந்திய தண்டனை சட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துகிறது


Balasubramanian
ஏப் 27, 2024 18:58

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற - திருக்குறள் -34 மனம் தூய்மையாக இருப்பதே அறம் மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை - இவர் செய்யும் ஆர்பாட்டத்தை பார்த்தால்???


GMM
ஏப் 27, 2024 18:55

ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு அமலாக்க அதிகாரிகளை பாதிக்கும் பல கோடி ஊழலுக்கு சட்ட பூர்வ ஆதாரம் இருக்காது? தடயம் மறைக்க முடியாது உச்ச நீதிமன்றம் மீது பொன்முடி போல் நம்பிக்கை வைத்து தைரியமாக பதில் மனு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் குற்றவாளிக்கு சட்ட அறிவுரை கூறாமல் காப்பாற்ற வாதிடுகின்றனர் இது நீடிக்க கூடாது


அரவழகன்
ஏப் 27, 2024 18:55

நான் கெஜ்ரிவால் இல்லை நான் வேறு என சொல்வார் பிராடு


Srinivasan Krishnamoorthi
ஏப் 27, 2024 18:07

விளக்குமாறு சொல்ல வேண்டும் இந்த விளக்குமாறு சின்ன கட்சி தலை கைபேசி மடிக்கணனி கடவு சொல் மறுப்பது யார் மடியில் கணம் இருக்கில்ல ? அதன் இப்படி பேசுது ஒருகால் MK பாணியில் ஆதாரம் இல்லாமல் குற்றம் செய்து விட்டாரோ இவர் ?


கல்யாணராமன்
ஏப் 27, 2024 17:58

அரசியல்வாதிகள் அனைவரும் கைது செய்யப்படும்போது கூட இப்படிப்பட்ட பதிலையே சொல்கிறாட்கள் எவனாவது தான் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளானா?


Anand
ஏப் 27, 2024 17:31

அடுத்ததாக, இந்த சுப்ரீம் கோர்ட் என்னை விசாரிப்பது சட்டப்படி செல்லாது ஏன் கூறுவான்


karthik
ஏப் 27, 2024 17:08

ஆதாரம் இல்லை என்று தான் சொல்றியே தவிரநான் லஞ்சம் வாங்கவில்லை என்று சொல்லமாற்ற பார்த்தியா? திருடன் என்றைக்கு ஆமாம் நான் திருடினேன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறான் ?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி