உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது : சி.ஐ.டி. அலுவலகம் கொண்டு செல்லப்பட்டார்

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது : சி.ஐ.டி. அலுவலகம் கொண்டு செல்லப்பட்டார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த கர்நாடகா ம.ஜ.த., எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா இன்று (மே.31) ஜெர்மனியிலிருந்து நள்ளிரவு பெங்களூரு வந்திறங்கினார். அவரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் சி.ஐ.டி. அலுவலகம் கொண்டு சென்றனர். கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, 33. ஹாசன் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.இவர், சில பெண்களை மிரட்டி, பலாத்காரம் செய்ததாகவும், ஏராளமான ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததாக கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வெளியானது. ஏப். 26ம் தேதி இரவு, ஜெர்மனிக்கு தப்பியோடினார்.பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில், அவர் மீது மூன்று பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.இந்நிலையில் கடந்த 28-ம் தேதி சமூக வலைதளங்களில் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டார். அதில் மே.31-ம் தேதி நாடு திரும்புவதாகவும், சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராக உள்ளதாவும் தெரிவித்தார்.ஜெர்மனின் முனிச் நகரிலிருந்து புறப்பட்டு இன்று (மே.31) 1.30 மணியளவில் பெங்களூரு விமான நிலையம் வந்திறனார். அங்கு காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை கைதுசெய்து சி.ஐ.டி. அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். முன்னதாக அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்று (மே.31ம் தேதி) காலை 10:00 மணிக்கு எஸ்.ஐ.டி., முன் விசாரணைக்கு ஆஜராகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

கனோஜ் ஆங்ரே
மே 31, 2024 12:46

இவன் அந்த தொகுதி மக்களால் எம்பி...யா தேர்ந்தெடுக்கப்படுவார்... அவருக்கு எம்.பியாக பதவி பிரமாணமும் செய்து வைக்கப்படும்... வழக்கு நீர்த்து போய்... இறுதி நிரபராதியாக வெளியே வந்து கர்நாடக மாநில முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பு இருக்கு...? ஏன்னா... ஒரு ஃபிராடே ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது, இவர் ஆட்சியில் அமர வைக்க மாட்டார்களா என்ன அம்மக்கள்.


C.SRIRAM
மே 31, 2024 11:58

ரேவண்ணா அல்ல ரெய்ப் அண்ணா


JAGADEESANRAJAMANI
மே 31, 2024 11:11

அவனுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.


JAGADEESANRAJAMANI
மே 31, 2024 11:09

அவனுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு மிக கடுமையாக தண்டனை கொடுக்கப்படவேண்டும்.


Muralidharan raghavan
மே 31, 2024 10:57

இவன் மீண்டும் வெற்றிபெற்றாலும் அதனை செல்லாது என்று அறிவித்து மேலும் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும்


Senthoora
மே 31, 2024 05:53

ஆட்சி மாறாவிட்டால், வாழ்நாள் முழுக்க தீகார்த்தான்.


Kasimani Baskaran
மே 31, 2024 05:19

தமிழகம் போல கையை உடைப்பார்களா..


தமிழன்
மே 31, 2024 04:07

இந்த கேடுகெட்ட நாய்க்கு அவர் இவர் என மரியாதை வேறு கேடா??


RAJ
மே 31, 2024 02:39

பொறுக்கிக்கு என்ன சார் அவர் இவர்னு... அம்மணமாக்கி . நடுத்தெருவில் விடுங்க.. .. மக்கள் நல்லபடியாக முடித்து வைப்பார்கள்..


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி