உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரஜ்வல் ரேவண்ணா தாயார் பவானி ரேவண்ணா முன்ஜாமின் தள்ளுபடி

பிரஜ்வல் ரேவண்ணா தாயார் பவானி ரேவண்ணா முன்ஜாமின் தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெண் கடத்தல் வழக்கில், கர்நாடகா மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்.பி., பிரஜ்வல் தாயார் பவானி ரேவண்ணாவிற்கு முன்ஜாமின் வழங்க கோர்ட் மறுத்துவிட்டது.கர்நாடகா மதசார்பற்ற ஜனதா தள எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார், ஆபாசவீடியோ வைத்திருந்தது தொடர்பான வழக்கை கர்நாடக சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் வெளிநாடு சென்று திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர். அவரது நீதிமன்ற காவல் ஜூன் 06-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மைசூர் மாவட்டம் கே.ஆர். நகரைச் சேர்ந்த பெண்ணை கடத்தியதாக பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயாரும், எச்.டி. ரேவண்ணா மனைவியுமான பவானி ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கைதை தவிர்க்க பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் பவானி ரேவண்ணா முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து பவானி ரேவண்ணாவும் கைதாகலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
ஜூன் 01, 2024 06:52

சில மாதங்களுக்கு முன்னர் இந்த பெண் பயணித்த காரின் மீது பைக் ஒன்றை மோத வைத்து சென்ஸேஷன் ஆக்கினர் , சிலநேரங்களில் இவரது குடும்பம் குறிவைக்க படுகிறதோ என்றும் எண்ணுகிறேன்


sankaranarayanan
ஜூன் 01, 2024 00:13

ஏது ஏது கவுடா குடும்பமே பெண்கள் கடத்தல் குடம்பமாகிவிட்டதே மிகவும் வேதனையாக உள்ளது பெண்கள் கடத்தல் கஞ்சா கடத்தல் தங்கம் கடத்தல் எல்லாம் போக இப்போது பெண்கள் கடத்தல் வெகுவாகிவிட்டனவே


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை