மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
2 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
2 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
4 hour(s) ago | 1
புதுடில்லியில் ராஷ்டிரபதி பவனின் தெற்கு பகுதியில் மாருதி வளாகத்தில் பிரதமர்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. நாட்டின் தனித்துவமான பங்களிப்பை வழங்கிய அனைத்து பிரதமர்கள் பற்றிய தகவல்கள், இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இந்த அருங்காட்சியகத்தை, முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று பார்வையிட்டார். அங்கிருந்த அதிகாரிகள், அனைத்து பிரதமர்கள் குறித்து தகவல்களை வழங்கினர். மேலும், பார்வையாளர் புத்தகத்தில் தேவகவுடா தனது கருத்தை பதிவு செய்தார்.பின், இது தொடர்பாக தனது சமூக வலைதளமான 'எக்ஸ்'சில் குறிப்பிட்டு உள்ளதாவது:புதுடில்லியில் உள்ள பிரதமர்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டேன். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இத்திட்டத்தை செயல்படுத்தி, நாட்டின் பிரதமர்களின் பங்களிப்பை காட்சிப்படுத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.அருங்காட்சியகத்தில் எனக்கு வரவேற்பு அளித்த நிருபேந்திர மிஸ்ராவுக்கு நன்றி. பிரதமர் அருங்காட்சியகத்தை காட்சிப்படுத்த நன்கு உழைத்துள்ளார். கடவுளின் ஆசி
அருங்காட்சியகத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடகாவின் குக்கிராமத்தில் விவசாயியின் மகனாக பிறந்து, நாட்டின் பிரதமராக வளர்ந்தேன். இதை நான் கனவிலும் கூட நினைக்கவில்லை.அதே வேளையில் மக்களின் ஆசிர்வாதமும், கடவுளின் ஆசியும் இருந்தால் எதுவும் நடக்கும். நான் பிரதமராக இருந்தபோது, நாட்டு மக்களுக்காக முடிந்த அளவு உழைத்தேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். மெட்ரோவில் தேவகவுடா
ராஜ்யசபா எம்.பி.,யான முன்னாள் பிரதமர் தேவகவுடா, பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பங்கேற்க டில்லி சென்றுள்ளார். ஞாயிற்று கிழமையான நேற்று, டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்தார்.இது குறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:இன்று (நேற்று) நான், டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்து மகிழ்ந்தேன். எனது சகோதர, சகோதரியருக்கு இந்த வசதி எப்படி உதவுகிறது என்பதை பற்றி, தகவல் பெற்றேன். பயணியரின் நலனுக்காக சிறப்பான போக்குவரத்து சேவை வழங்கும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.கடந்த 1996 ஜூன் 1 முதல், 1997 மார்ச் 24 வரை நான், இந்த நாட்டின் பிரதமராக இருந்தேன். அன்றைய டில்லி லெப்டினென்ட் கவர்னர், டில்லி முதல்வர், மத்திய அரசின் உதவியுடன், டில்லி மெட்ரோ திட்டம் வகுக்கப்பட்டது.தற்போது, நாடு முழுதும் தினமும் 65 லட்சம் மக்கள், மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் உதவியால், டில்லி மெட்ரோ ரயில் பாதை மேலும் விரிவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.� புதுடில்லியில் பிரதமர் அருங்காட்சியகம் முன் தேவகவுடா.� அருங்காட்சியகத்தின் உள்ளே தேவகவுடா- நமது நிருபர் -.
2 hour(s) ago
2 hour(s) ago
4 hour(s) ago | 1