உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் ஆதரவு சுவரொட்டி ரோகினி வாலிபர் கைது

பாகிஸ்தான் ஆதரவு சுவரொட்டி ரோகினி வாலிபர் கைது

ரோகினி: பாகிஸ்தான் ஆதரவு சுவரொட்டிகளை ஒட்டியதற்காக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.மேற்கு டில்லியின் ரோகினி பகுதியில், அவந்திகா சி-பிளாக் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாலிபர் ஒருவர் பாகிஸ்தான் ஆதரவு சுவரொட்டிகளை ஒட்டியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். பாகிஸ்தான் ஆதரவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை ஆதரத்துடன் பதிவு செய்தனர்.அத்துடன் வாலிபர் குடியிருக்கும் வீட்டில் ஏராளமான பாகிஸ்தான் ஆதரவு சுவரொட்டிகளையும் பேனர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வாலிபர், மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருக்கிறார். அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம்,” என்றார்.பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகளுடன் இவருக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாகிஸ்தான் ஆதரவு சுவரொட்டிகளை வாலிபர் ஒட்டியிருக்கும் வீடியோக்களை சிலர் சமூக வலைதளங்களில் பதிவேற்றியிருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.விசாரணை தொடர்ந்து நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ