உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு வெற்றிக்கு பின் அமேதி மக்களை கைவிட்ட ராகுல்: ஸ்மிருதி இரானி

வயநாடு வெற்றிக்கு பின் அமேதி மக்களை கைவிட்ட ராகுல்: ஸ்மிருதி இரானி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வயநாட்டில் வெற்றி பெற்ற பின், அமேதி மக்களை ராகுல் கைவிட்டு விட்டார்' என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.ராமநவமியை முன்னிட்டு, எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஸ்மிருதி இரானி கூறியிருப்பதாவது: ராகுல் சனாதனத்திற்கு எதிரானவர். ராமர் இல்லை எனக் கூறிய ராகுல் ராம நவமியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயநாட்டில் வெற்றி பெற்ற பின், அமேதி மக்களை ராகுல் கைவிட்டு விட்டார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பை ராகுல் நிராகரித்தது வருத்தமான விஷயம். கடவுளை நிராகரிப்பவருக்கு என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M S RAGHUNATHAN
ஏப் 18, 2024 21:19

எங்கே அமெதியிலும் போட்டி என்று சொன்னால் சேட்டன்கள், இஸ்லாமியர்கள் வாக்கு செலுத்த மாட்டார்கள் என்பதால் இன்னமும் அங்கு மனு தாக்கல் செய்யவில்லை வயநாடு தேர்தல் வாக்கு பதிவு முடிந்தவுடன் அங்கு மனு தாக்கல் செய்யப் போவதாக பேச்சு அடிபடுகிறது


அப்புசாமி
ஏப் 18, 2024 19:28

இந்தம்மா எம்.பி ஆன பிறகு அமேதிக்கு என்ன செஞ்சாரு கோவாலு?


Kalyanaraman
ஏப் 18, 2024 15:07

வெற்றி பெற்ற பின் வயநாடு தொகுதி மக்களையே கண்டுக்கல, இதில் லிஸ்டில் இல்லாத அமேதி தொகுதி எப்படி ஞாபகமிருக்கும்


Lion Drsekar
ஏப் 18, 2024 13:48

வெற்றிக்கு பின்பு மக்களுக்காக யார் இருக்கிறார்கள் இதில் எந்த ஒரு ஆட்சியுமே விதி விலக்கல்ல ? எப்போதும் போல் திருட்டு,, கொலை, கொள்ளை , வழிப்பறி, காவலர்கள் வழி மறித்து அபராதம் வசூலித்தல் , ஆள் நடமாட்டமே இல்லாத ரோட்டில் வண்டி ஓட்டினாலும் தலைக்கவசம் இல்லை என்றால் அபராதம் வசூலித்தல் , பிறந்தவன் எல்லோருமே அரசாங்கத்துக்கு மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு வரி என்ற பெயரில் , சேவை என்ற சேவை மறந்து அங்கேயும் வியாபாரம் , கொள்ளை லாபம் ஈட்டும் நிலைகளில் அரசு அலுவலகங்கள் என்று எதுவுமே இன்றுவரை மாறவில்லையே மக்கள் பிரநிதிகளுக்கு சம்பள உயர்வு, பென்சன் உயர்வு மக்களுக்கு ???? வந்தே மாதரம்


Indian
ஏப் 18, 2024 13:44

கடவுள் பெயரை வைத்து ஏமாற்றுபவர்களுக்கும் தண்டனை தான் கிடைக்கும்


மேலும் செய்திகள்