உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் மன்னிப்பு கேட்கணும் பா.ஜ., போப்பையா நெருக்கடி

ராகுல் மன்னிப்பு கேட்கணும் பா.ஜ., போப்பையா நெருக்கடி

குடகு: ''லோக்சபாவில் ஹிந்துக்கள் குறித்து பேசியதற்கு, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., போப்பையா வலியுறுத்தி உள்ளார்.குடகு மடிகேரியில் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., போப்பையா நேற்று அளித்த பேட்டி:லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவி மிகவும் முக்கியமானது. அரசு தவறு செய்தால் அதை கண்டித்து அறிவுரை கூற வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல், லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஹிந்துக்கள் பற்றி விமர்சித்து பேசுகிறார்.லோக்சபாவில் ராகுல் பேசுவது மட்டுமல்ல, அவரது சைகைகளும் குழந்தைத்தனமாக இருந்தது. அவர் தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும். ஹிந்துக்களுக்கு எதிராக பேசினால், பா.ஜ., அமைதியாக இருக்காது.கர்நாடக அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களால், அரசின் கஜானா காலியாகி விட்டது. வரும் நாட்களில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும்.மைசூரு நகர்புற மேம்பாட்டு வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளது. முதல்வரின் மனைவிக்கும் நிலம் ஒதுக்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைத்து, தான் குற்றமற்றவர் என்பதை சித்தராமையா நிரூபித்து காட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை