| ADDED : மார் 21, 2024 03:09 PM
புதுடில்லி: ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையால் பா.ஜ.,விற்கு அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.இது குறித்து கிரண் ரிஜிஜு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வரும் லோக்சபா தேர்தலில் தே.ஜ., கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். இதில் பா.ஜ., 370 தொகுதிகளை கைப்பற்றும். காங்கிரஸ் தலைவரின் இதயம், ஆன்மா மற்றும் உடல் முழுவதும் பிரதமர் மற்றும் பா.ஜ., மீதான வெறுப்பால் நிரம்பியுள்ளது. இது அவரது உடல்நிலைக்கு நல்லதல்ல. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து பிரதமர் மோடி அரசியலுக்கு வந்தது ராகுலுக்கு பிடிக்கவில்லை. ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையால் பா.ஜ.,விற்கு அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ராகுல் தனது யாத்திரையின் போது எங்கு சென்றாலும், அவரை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும். மோடி தனது திறமை மற்றும் மக்களின் அன்பு மற்றும் ஆசியால் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். நாங்கள் ராகுலை ஒருபோதும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு கிரண் ரிஜிஜு கூறினார்.