உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2026 டிசம்பருக்குள் ரயில்வே பணிகள்

2026 டிசம்பருக்குள் ரயில்வே பணிகள்

துமகூரு : ''கர்நாடகாவில் நடந்து வரும் அனைத்து ரயில்வே திட்ட பணிகளும், 2026 டிசம்பருக்குள் முடிக்கப்படும்,'' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.துமகூரு மாவட்டம் மதுகிரியில் நேற்று பா.ஜ., - ம.ஜ.த., சார்பில் மத்திய அமைச்சர் சோமண்ணாவுக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:மாநிலத்தில் ரயில்வே பணிகளுக்கு பல ஆண்டுகளாக இடம் கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால் பணிகள் தாமதமாகி வருகின்றன. இதற்கு நிலம் ஒதுக்கி தருமாறு, முதல்வர் சித்தராமையாவிடம் முறையிட்டுள்ளேன்.இதை தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தி, இடம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ரயில்வே திட்டப்பணிகள் 2026 டிசம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அழைக்கப்பட்டு, திறப்பு விழா நடத்தப்படும்.மதுகிரி ஏகசிலா மலைக்கு 'ரோப் வே' அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.14_DMR_0009பா.ஜ., - ம.ஜ.த., சார்பில் நடந்த பாராட்டு விழாவில், மத்திய அமைச்சர் சோமண்ணா கவுரவிக்கப்பட்டார். இடம்: மதுகிரி, துமகூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை