உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபை குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சேருங்கள் சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

சபை குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சேருங்கள் சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

புதுடில்லி, 'லோக்சபாவில், நான் பேசிய பல பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இதை மீண்டும் சபை குறிப்பில் சேர்க்க வேண்டும்' என, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடிதம் எழுதி உள்ளார்.புதிய லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர், கடந்த 24ல் துவங்கிய காங்., - எம்.பி., ராகுல், எதிர்க்கட்சி தலைவரான பின், முதன்முறையாக லோக்சபாவில் நேற்று முன்தினம் பேசினார்.

பதிலடி

அப்போது, பிரதமர் மோடி குறித்தும், பா.ஜ., குறித்தும் கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர், ராகுல் பேசும் போது குறுக்கிட்டு பதிலடி கொடுத்தனர்.இதற்கிடையே, ராகுலின் குறிப்பிட்ட பேச்சுகள், சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எழுதிய கடிதம்:லோக்சபா நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் - 380ல் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை நீக்குவதற்கான அதிகாரம் மட்டுமே, சபாநாயகருக்கு உள்ளது. அப்படி இருக்கையில், என் உரையின் கணிசமான பகுதிகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. நீக்கப்பட்ட கருத்துகள், விதி - 380ன் கீழ் வராது என்பதை கூற விரும்புகிறேன்.மக்கள் பிரச்னைகளை சபையில் எழுப்புவது ஒவ்வொரு உறுப்பினரின் உரிமை. அந்த உரிமையையும், நாட்டு மக்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றவே, லோக்சபாவில் பேசினேன். என் கருத்துகளை சபை குறிப்பில் இருந்து நீக்குவது, பார்லி., ஜனநாயகத்துக்கு எதிரானது.இந்த தருணத்தில், பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்குரின் பேச்சை குறிப்பிட விரும்புகிறேன்.

ஆச்சரியம்

அவரது பேச்சுகள் முழுதும் குற்றச்சாட்டுகள் நிறைந்திருந்த நிலையில், ஒரே ஒரு வார்த்தை மட்டும் நீக்கப்பட்டது, ஆச்சரியம் அளிக்கிறது. சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட என் கருத்துகளை மீண்டும் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, நேற்று செய்தியாளர்களிடம் ராகுல் கூறுகையில், “மோடியின் உலகில் மட்டும், உண்மையை அகற்ற முடியும். லோக்சபாவில் நான் பேசியது அனைத்தும் உண்மை. அதை அவர்களால் அகற்ற முடியாது. உண்மையே வெல்லும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி