மேலும் செய்திகள்
கம்ச மன்னனின் அரசவையில் ஒடிஷா முதல்வர் மஜி ஆஜர்
2 hour(s) ago
புத்தாண்டு வாழ்த்து மோசடி: போலீஸ் எச்சரிக்கை
2 hour(s) ago
உணவு டெலிவரி ஊழியர்களுக்கு தாராள ஊக்கத்தொகை
2 hour(s) ago
பெங்களூரு : நடைபாதைகளை ஆக்ரமித்து, கடைக்காரர்கள் பொருத்திய பெயர்ப்பலகைகளை, போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தினர்.பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து, அறிவிப்பு பலகைகள் பொருத்தியிருந்தனர். இதனால் பொது மக்களின் நடமாட்டத்துக்கு, பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து புகார் வந்தது. இவற்றை அகற்றும்படி, பலமுறை போலீசார் உத்தரவிட்டும் பலனில்லை. எனவே பெங்களூரு கிழக்கு மண்டல போக்குவரத்து போலீசார், நடவடிக்கையில் இறங்கினர்.தொம்மலுார் சாலை, ஹலசூரு பிரதான சாலை, இந்திரா நகரின் 100 அடி சாலை, பழைய மெட்ராஸ் சாலை, எம்.எம்.சாலை, ஆயில்மில் சாலை, செையின்ட் ஜான்ஸ் சாலை, கோவிந்தபுரா பிரதான சாலை, ராமமூர்த்தி நகர், பனத்துார் பிரதான சாலை, காடுகோடி பிரதான சாலை, ஐ.டி.பி.எல்., பிரதான சாலைகளில், நேற்று பெயர்ப்பலகைகளை அகற்றினர். சுமூகமான போக்குவரத்துக்கு வழி வகுத்தனர்.கிழக்கு போக்குவரத்து பிரிவு டி.சி.பி., குல்தீப் குமார் ஜெயின் கூறியதாவது:பலமுறை உத்தரவிட்டும், கடைக்காரர்கள் நடைபாதைகளில் பொருத்திய பெயர்ப்பலகைகளை அகற்றவில்லை. விதிமுறைகளை மீறிய கடைக்காரர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago