உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தன்னை மாற்ற கங்கணம் கட்டுவோருக்கு பதிலடி: காங்., நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய சிவகுமார்

தன்னை மாற்ற கங்கணம் கட்டுவோருக்கு பதிலடி: காங்., நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய சிவகுமார்

பெங்களூரு: தன்னை மாற்ற வேண்டும் என்று 'கங்கணம்' கட்டிக் கொண்டு செயல்படுபவர்களுக்கு பதிலடி தரும் வகையில், நிர்வாகிகளுடன் நேற்று துணை முதல்வர் சிவகுமார் ஆலோசனை நடத்தினார்.கர்நாடக மாநில காங்., தலைவர் பதவி குறித்து, முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளரான அமைச்சர் ராஜண்ணா உட்பட பலரும், வெளிப்படையாக பேசி வருகின்றனர். 'வெளிப்படையாக யாரும் பேச வேண்டாம்' என மாநிலத் தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார் எச்சரித்தும், யாரும் பொருட்படுத்தவில்லை.இதனால், எதிர் தாக்குதலுக்கு சிவகுமார் தயாராகி விட்டார். 'கட்சி அமைப்பு' என்ற போர்வையில், பெங்களூரில் நேற்று மாநில காங்கிரஸ் அலவலகத்தில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:l மண்டலம் வாரியாக உண்மை கண்டறியும் குழு அமைத்தல்l லோக்சபா முடிவுகள் குறித்து விசாரிக்க, துறை வாரியாக தனிக்குழுl லோக்சபா தேர்தலில் பின்னடைவை சந்தித்த சட்டசபை தொகுதிகள் வாரியாக காரணங்களை கண்டறிதல்l விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான மண்டலக் குழு நியமித்தல்l பெங்களூரு மாநகராட்சி, ஜில்லா பஞ்சாயத்து தேர்தல்களில் தீவிரமாக பணியாற்றுதல்l ஒவ்வொரு மாவட்டம், சட்டசபை தொகுதிக்கு ஒரு ஒருங்கிணைப்பு குழு அமைத்தல்l மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர்களுடன் தனித்தனி கூட்டம் நடத்துதல்l கட்சியை வலுப்படுத்த ஆலோசனை வழங்க, அலுவலக நிர்வாகி களுக்கு அறிவுரைகள்l பூத் அளவிலான பிரச்னைகள் தீர்க்க, வார்டு கமிட்டிகள் / பஞ்சாயத்து கமிட்டிகள் அமைத்தல்l வாக்குறுதி பயனாளிகளின் பதிவு, மொபைல் போன் எண் சேகரிக்க அறிவுறுத்தல்l இடைத்தேர்தலுக்கு பேரூராட்சி அளவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை நியமிக்க முடிவுl உள்ளூர் எம்.எல்.ஏ.,க் கள், மூத்த தலைவர்கள் தலைமையில் தேர்தல் முகாம் அலுவலகம் அமைத்தல் உட்பட பல விஷயங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ