உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்மஸ்தலா கோவிலில் ரேவண்ணா உருக்கம்

தர்மஸ்தலா கோவிலில் ரேவண்ணா உருக்கம்

தட்சிண கன்னடா: ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமியை தரிசனம் செய்தார்.பெண் கடத்தல் வழக்கில் சிக்கிய ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, ஜாமினில் உள்ளார். சிறையில் இருந்து வெளியில் வந்தது முதல், மாநிலத்தின் பல கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார்.நேற்று தட்சிண கன்னடா மாவட்டம், தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாத சுவாமி கோவிலுக்கு சென்றார். சுவாமியை தரிசித்த பின், கோவில் தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டேவை சந்தித்து பேசினார்.பின், அவர் அளித்த பேட்டி:மஞ்சுநாத சுவாமியின் பக்தனான நான், பல ஆண்டுகளாக அவரை தரிசித்து வருகிறேன். அதுபோன்று இன்றும் தரிசித்தேன். எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், 25 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக உள்ளேன்.சட்டத்தின் மீது எனக்கு மரியாதையும்; கடவுள் மீது நம்பிக்கையும் உண்டு. வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அது தொடர்பாக எதுவும் கருத்து தெரிவிக்க மாட்டேன். மஞ்சுநாத சுவாமி மீது நம்பிக்கை வைத்து, அனைத்தையும் அவர் பார்த்து கொள்ளுமாறு அவரிடமே விட்டுவிட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமியை தரிசனம் செய்து விட்டு, வெளியே வந்த ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா. இடம்: தட்சிண கன்னடா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை