உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனிதர்களின் நடவடிக்கையால் ஆறுகள் ஓடைகளாக மாறுகின்றன

மனிதர்களின் நடவடிக்கையால் ஆறுகள் ஓடைகளாக மாறுகின்றன

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜதிந்தர் ஜெய் சீமா எழுதிய, 'காலநிலை மாற்றம்: கொள்கை, சட்டம் மற்றும் நடைமுறை' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா, புதுடில்லியில் நேற்று நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:உயரும் வெப்பநிலை மற்றும் மனிதர்களின் தேவையற்ற நடவடிக்கைகளால் நீண்ட ஆறுகளின் பல்வேறு பகுதிகள் வறண்டு வருகின்றன. இமயமலையில் உருவாகும் சட்லெஜ் நதி பாயும் பகுதிகளில் பல்வேறு அணைகள் கட்டப்படுவதால், இறுதியில் அது ஓடையாக மாறியுள்ளது. காலநிலை மாற்றம் நாட்டின் விவசாயத் துறையை கடுமையாக பாதித்துள்ளது.விவசாயத் துறையின் வளர்ச்சி, நாட்டின் நதிகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. ரசாயன உர முறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் விவசாய வளர்ச்சிக்கு எதிராக உள்ளன. அதேசமயம், ஆறுகள், தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் சமூகத்தின் பரந்த வலையமைப்பை பருவமழை முறைகளின் மாற்றங்கள் கடுமையாக பாதித்துள்ளன.சுற்றுச்சூழல் சட்டங்கள், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், பின்பற்ற வேண்டிய நவீன நடைமுறைகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கடும் அச்சுறுத்தலாக உள்ள பருவநிலை மாற்றத்தை சமாளிக்க நிதி ஆயோக் போல் நிரந்தர ஆணையம் அமைக்கப்பட வேண்டும்; சவால்களை எதிர்கொள்ள சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என, இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

subramanian
ஜூலை 14, 2024 21:45

மணல் கொள்ளையன் பொன்முடிக்கு ஜாமீன் தந்தது எந்த நீதி??


ஆரூர் ரங்
ஜூலை 14, 2024 09:28

நீர் தேக்கப்படும்போது அணையில் வண்டல், சவுடு மண்ணும் தேங்கிவிடுகின்றன. காலப் போக்கில் அணையின் கொள்ளளவு குறைந்து விடுகிறது. வண்டல் வயல்களுக்கு சென்று சேராத காரணத்தால் நிலவளம் குறைந்து விளைச்சல் பாதிக்கிறது. இதற்கு தீர்வு காணும் வரை புதிய அணைகளைக் கட்ட வேண்டாமே.


ராது
ஜூலை 14, 2024 08:57

ஆம் கூட்டுக் குடும்பங்கள் வீட்டுக் குடும்பங்கள் ஆனது போல் - ஆறுகளும் ஓடை ஆகிறது - மனிதனைப் பார்த்து அவைகளும் தனிக் குடிதனம் போதிகிறதோ


Kasimani Baskaran
ஜூலை 14, 2024 07:08

ஆவணங்கள் கூறுவதை விட பத்து மடங்கு மண் அள்ளிய மந்திரியின் தண்டனையை நீதிமன்றமே நிறுத்தி வைத்து அந்த வழக்கை சட்டத்துக்கு புறம்பாக அந்தரத்தில் தொங்கவிட்டது. அதாவது சுற்றுச்சூழலுக்கு எதிராக நீதித்துறை களமிறங்கி இருக்கும் பொழுது எப்படி ஆறுகள் நாட்டுக்குள் ஓடமுடியும் ?


மேலும் செய்திகள்





புதிய வீடியோ