உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வழக்கறிஞராக பதிவு செய்ய ரூ.42,100 கட்டணமா: கோர்ட் குட்டு

வழக்கறிஞராக பதிவு செய்ய ரூ.42,100 கட்டணமா: கோர்ட் குட்டு

புதுடில்லி 'சட்டப்படிப்பு முடித்தவர்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்ள, மாநில வழக்கறிஞர்கள் சங்கம் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாநில வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தில் பதிவு செய்ய, நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, வழக்கறிஞர்கள் சார்பில் 10 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

குஜராத்தில் எவ்வளவு?

வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 24ன் கீழ், வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்ள பொதுப் பிரிவினருக்கு 650 ரூபாயும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 125 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், ஒடிசாவில் 42,100 ரூபாய்; குஜராத்தில் 25,000; உத்தரகண்ட்டில் 23,650; கேரளாவில் 20,050 ரூபாய் என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த வழக்கில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.அதன் விபரம்:ஒரு தனிநபரின் கண்ணியம் என்பது அவரது திறனை முழுதுமாக வளர்த்துக்கொள்ளும் உரிமையையும், தனக்கு விருப்பமான தொழிலை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியது.வழக்கறிஞர்கள் சங்கங்களில் பதிவு செய்து கொள்ள, முன்நிபந்தனையாக அதிகப்படியான பதிவுக் கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்கள் வசூலிப்பது வழக்கறிஞர் தொழிலில் நுழைவதற்குத் தடையை உருவாக்குகிறது.இந்த அதிக கட்டண வசூல், சமூக பொருளாதார தடைகளை எதிர்கொள்பவர்களின் முன்னேற்றத்தையும், கண்ணியத்தையும் இழிவுபடுத்துகிறது. விளிம்புநிலை மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரை பாகுபாடுடன் நடத்துகிறது.

அவசியமில்லை

பார்லிமென்ட் வகுத்துள்ள நிதிக் கொள்கையை மாற்றவோ, திருத்தவோ இந்திய பார் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு - 24 வகுத்துள்ள கட்டணத்துக்கு மேல் வசூலிக்க கூடாது.இதுவரை வசூலித்த கட்டணத்தை மாநில வழக்கறிஞர்கள் சங்கங்கள் திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லை.சட்டம் பயின்றவர்கள் வழக்கறிஞர்களாகப் பதிவுசெய்த பின் வழங்கப்படும் பிற சேவைகளுக்கு, வழக்கறிஞர் அமைப்புகள் கட்டணம் விதிக்கலாம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 31, 2024 12:38

இது கோர்ட்டுக்கு இப்பத்தேன் தெரியும் ...... நம்புங்க ..... என்னது காந்தி செத்துட்டாரா மொமெண்ட் .....


GMM
ஜூலை 31, 2024 08:04

வழக்கறிஞர் சட்ட பிரிவு அவர்களுக்கு மட்டும் பொருந்தும். அதிக சங்க உறுப்பினர்கள் ஏற்கும் போது, பதிவு கட்டண மாற்றம் செல்லும். சட்டப்படி செல்லாது என்றால் திருப்பி தர வேண்டும். ஆரம்பம் சட்ட மீறலுடன் துவக்கம். உச்ச நீதிமன்றம் தேசம் முழுவதும் செயல் படுத்த வேண்டிய பிரச்சனைக்கு தீர்வு காண மட்டும் தான் அமைக்கபட்டது. Ex. CAA.


bgm
ஜூலை 31, 2024 07:43

கண்ணியமா? எவ்ளோ வக்கீல் ஒழுங்கா டிகிரி முடித்து வேலை செய்கின்றனர்? ஃபீஸ் கொள்ளை. பெரும்பாலும் கட்ட பஞ்சாயத்து செய்கின்றார்.


S.V ராஜன்(தேச பக்தன்...)
ஜூலை 31, 2024 07:32

மேற்படி பதிவுத்தொகை 650 வரையறுத்த காலத்தில் வாங்கிய அதே சம்பளம் தான் நிதியரசர் இப்பொழுதும் வாங்குகின்றாரா...?


Venkatasubramanian krishnamurthy
ஜூலை 31, 2024 07:02

எஸ்சி &எஸ்டி பிரிவினர் படிக்கும்போதும், பின் அரசுப் பணிகளில் சேர்வதற்கும் இடஒதுக்கீடு தேவைப்படுவது சரிதான். ஆனால் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்வதற்கான கட்டணத்தில் கூடவா சலுகை? பொதுப்பிரிவினருக்கான கட்டணமான ₹650ஐ கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளார்களா? அல்லது அவர்கள் வழக்கறிஞர் பணிகளை ஒரு சமூக சேவையாக வாழ்நாள முழுவதும் கட்டணமின்றி செய்கிறார்களா?


Kasimani Baskaran
ஜூலை 31, 2024 05:48

தனி நபர் மண்ணள்ளி தொழில் செய்தால் அதை உச்ச நீதிமன்றம் தவறில்லை என்று சொல்லாத குறை ஒன்றுதான். கோடிகளில் சம்பாதிக்கும் வக்கீல்களை பார்த்து பொறாமைப்படாமல் இப்படி தீர்ப்பு கொடுப்பது ஆச்சரியம் - ஏனென்றால் சில சமூக விரோத வக்கீல்கள் வாங்கும் கட்டணம் நீதிபதிகள் சில ஆண்டுகள் சம்பாதிக்கும் தொகையை விட அதிகம். உதாரணத்துக்கு ஒரே வழக்கில் கபில் சிபல் தலைமை நீதிபதி பத்தாண்டுகள் சம்பாதிப்பதை விட அதிகம் சம்பாதித்து விடுவார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை