உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.1800 கோடி அபராதம்: காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்

ரூ.1800 கோடி அபராதம்: காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்

புதுடில்லி: ரூ.1800 கோடி அபராதம் கோரி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 2017-18 முதல் 2020-21 கால கட்டத்திற்கான வருமான வரி மற்றும் அபராதம் செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தை நாட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பொருளாதார ரீதியாக நெருக்கடி

இது குறித்து காங்கிரஸ் வழக்கறிஞர் விவேக் தங்கா கூறியதாவது: வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தப்படும். போதிய ஆவணங்கள் ஏதுமின்றி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பொருளாதார ரீதியாக மத்திய அரசு நெருக்கடி தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டம்

வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து, நாடு முழுவதும் நாளை(மார்ச் 30) போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
மார் 29, 2024 13:56

ஹெரால்ட்டில் அடித்த 5000 கோடியை வைத்து எளிதாகக் கட்டிவிடலாமே. இந்த அமவுண்ட் அவங்களுக்கு ஜுஜுபி.


S. Balakrishnan
மார் 29, 2024 13:35

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி !


Sampath Kumar
மார் 29, 2024 12:02

ithuku payru enna vaentru unga sollvaru .. patta jenmankal ithukalku


குமரி குருவி
மார் 29, 2024 11:49

தேச பலமிக்க கட்சிதான் காங்கிரஸ்...நம்புங்க..


முக்கிய வீடியோ