உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயந்து போய் ரேபரேலிக்கு ஓடிய ராகுல்: அமித்ஷா தாக்கு

பயந்து போய் ரேபரேலிக்கு ஓடிய ராகுல்: அமித்ஷா தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.குஜராத் மாநிலம் சோட்டா உதய்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: ராகுல் தலைமையில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் அமேதியில் தோல்வி அடைந்த ராகுல் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். இப்போது வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார். ராகுலுக்கு தேர்தலில் போட்டியிடுவதில் சீட் கிடைப்பதில் பிரச்னை இல்லை. ராகுல் ரேபரேலி தொகுதியில் பெரிய ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைவார். பா.ஜ., இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது. பிரதமர் மோடிக்கு ஆதரவாக மக்கள் உள்ளனர். சுகாதாரம், கல்வி போன்ற பணிகளை நரேந்திர மோடி செய்துள்ளார். காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி எங்களுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறப் போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
மே 05, 2024 12:15

நீங்கள் தான் தைரியசாலியாச்சே, தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிட்டு இருக்கலாமே !


பேசும் தமிழன்
மே 05, 2024 09:26

யாராக இருந்தாலும்.... ஒரு தொகுதியில் மட்டுமெ போட்டியிட வேண்டும்.... ஒரே ஆள் இரண்டு தொகுதியில் போட்டியிடுவது தடை செய்யப்பட வேண்டும்.....தேர்தல் ஆணையம் இதன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Thirumurugan Aritheertham
மே 04, 2024 23:39

அட நீங்கதான் ஜெயிக்க போறீங்க உண்மைய சொல்லுங்க சிவகாசி பயணம் ஏன் எதுக்காக ரத்து செய்யப்பட்டது


Thirumurugan Aritheertham
மே 04, 2024 23:35

தங்களின் சிவகாசி ரோடு ஷோ பயணம் ரத்தானதுக்கான காரணங்களை தெரிவிக்கலாமா ஐயா


Thirumurugan Aritheertham
மே 04, 2024 23:34

உங்கள் சிவகாசி பயணம் ஏன் ரத்து செய்தீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் ஐயா


பல்லவி
மே 04, 2024 21:55

சொந்தக்காசில சூனியம் பாஜாக வுக்கு நிகர் அவர்களே


சோழநாடன்
மே 04, 2024 21:45

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவையில் போட்டியிட்டபோது, உபியில் போட்டியிடாமல் பயந்துபோய் கேரளா சென்றுவிட்டார் என்று பாஜகவின் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் கேலி செய்தார்கள் இப்போது உபியில் ரேபரலி தொகுதியில் போட்டி என்ற காங்கிரஸ் அறிவிப்பையொட்டி, பாஜக தலைவர்கள் இராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியில் போட்டியிட்டால் தோல்வி என்று ரேபரலி தொகுதிக்குச் சென்றுவிட்டார் அங்கேயும் இராகுல் தோல்வி அடைவார் என்று கேலி செய்கிறார்கள் அப்படியனால், குஜராத் மாநிலம் விட்டு உபி வரணாசியில் மோடி பயந்துதான் போட்டியிட்டாரா? என்றால் இரு தொகுதியில் வெற்றி பெற்று வலிமையை நிரூபணம் செய்வார் என்று சால்சாப்பு சொன்னார்கள் பாஜக உங்களுக்கு வந்த இரத்தம், காங்கிரஸ்க்கு வந்த தக்காளி சட்னியா?


Syed ghouse basha
மே 04, 2024 21:04

ஆமா மோடி மட்டும் குஜராத்திலிருந்து உபி க்கு ஓடலாமா?


MADHAVAN
மே 04, 2024 16:54

ராகுல் என்ற தனிமனிதனை மோடி அமித்ஷா நட்டா இன்னும் இருக்குற எல்லா பிஜேபி காரனும் எதிர்க்கறானுங்கன்னா யாருக்கு பயம் மக்களுக்கு தெரியும்


MADHAVAN
மே 04, 2024 16:46

தனிமனித விமர்சனம் வைக்கும்போதே தெரிந்துவிட்டது,


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை