| ADDED : ஜூலை 24, 2024 11:44 PM
பெலகாவி : பெலகாவி மாவட்டம், கோகாக்கின் மரடிமத் கிராமத்தில், 'ஜெய் ஹனுமான் சஞ்சீவ நாயகா' என்ற மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பள்ளி பஸ் மூலம் சென்று வருகின்றனர் வழக்கம் போல் நேற்று காலை மாவனுார், கொடசினமல்கி, மேலமட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பஸ் சென்று கொண்டிருந்தது.மேலமட்டி கிராமம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. அதிர்ச்சியில் மாணவர்கள் கூச்சலிட்டனர்.பஸ் கவிழ்ந்ததை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள், உடனடியாக பஸ்சுக்குள் சிக்கிய மாணவர்களை மீட்டு, கொன்னுார் மற்றும் கோகாக் மருத்துவமனைகளில் சேர்த்தனர்.பஸ்சில், அளவுக்கு அதிகமாக மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று பெற்றோர், பள்ளி நிர்வாகம் மீது கோபத்தை வெளிப்படுத்தினர்.'பல ஆண்டுகளாக இச்சாலை முற்றிலும் பழுதடைந்து காணப்படுகிறது. ரோட்டை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் குழந்தைகளின் உயிருக்கு யார் பொறுப்பு' என, பெற்றோர் கேள்வி எழுப்பினர்.கோகாக் ரூரல் போலீசார் விசாரித்தனர்.25_DMR_0002சாலையில் கவிழ்ந்து கிடந்த தனியார் பள்ளி பஸ். இடம்: பெலகாவி.அளவுக்கு அதிகமான மாணவர்களுடன் சென்ற தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்ததில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.