உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதீஷ், சந்திரபாபுவுடன் சரத் பவார் பேச்சு?

நிதீஷ், சந்திரபாபுவுடன் சரத் பவார் பேச்சு?

புதுடில்லி:மத்தியில் ஆட்சி அமைக்க 'இண்டியா' கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக, நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிடம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேச்சு நடத்தியதாக கூறப்படும் நிலையில், அதை அவர் மறுத்துள்ளார். மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடம் தேவை என்ற நிலையில், கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணிகளை தே.ஜ., மற்றும் இண்டியா கூட்டணி கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க ஆதரவு தரும்படி, பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், ஆந்திராவில் முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், அதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சரத் பவார், ''சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் உட்பட யாரிடமும் பேசவில்லை,'' என கூறியுள்ளார். பீஹாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 14 இடங்களில் வென்றுள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், 16 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி இரண்டு இடங்களிலும் வென்றுள்ளன. தற்போது தே.ஜ., கூட்டணியில் உள்ள இவர்களது ஆதரவை பெற்றால், மத்தியில் ஆட்சி அமைக்கலாம் என இண்டியா கூட்டணியினர் கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்