உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., - ம.ஜ.த.,வின் கைப்பாவை கவர்னர் மீது சித்தராமையா பாய்ச்சல்

பா.ஜ., - ம.ஜ.த.,வின் கைப்பாவை கவர்னர் மீது சித்தராமையா பாய்ச்சல்

பெங்களூரு : கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வரின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதில், முறைகேடு நடந்துள்ளதால், முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபிரஹாம் என்பவர், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, முறைகேடு தொடர்பான ஆவணங்களுடன் புகார் அளித்தார்.இதன்படி, 'உங்கள் மீதான புகார் குறித்து, லஞ்ச ஒழிப்பு பிரிவின் கீழ் விசாரணை நடத்த ஏன் அனுமதி அளிக்க கூடாது?' என கேட்டு, முதல்வருக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என, கர்நாடக அமைச்சரவை நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றியது.இந்நிலையில், முதல்வர் சித்தராமையா நேற்று மைசூரில் அளித்த பேட்டி:கவர்னர் எனக்கு நோட்டீஸ் வழங்கியது சட்ட விரோதமானது; அரசியல் அமைப்புக்கு எதிரானது. மத்திய அரசு, ராஜ்பவனை தவறாக பயன்படுத்தி கொள்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கவிழ்ப்பதற்கு முயற்சிக்கிறது. பா.ஜ., - ம.ஜ.த.,வின் கைப்பாவையாக கவர்னர் செயல்படுகிறார்.என் மீது புகார் அளித்த ஆபிரஹாம், பிளாக் மெயில் செய்பவர். அவர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுத்திருப்பது சட்டத்துக்கு விரோதமான செயல். நான் எந்த தவறும் செய்யவில்லை. 136 எம்.எல்.ஏ.,க்கள் என்னை முதல்வராக தேர்வு செய்து, இந்த ஆட்சி அமைந்துள்ளது.நோட்டீஸ் அளிப்பதற்கு முன், சட்ட விதிமுறைகளை கவர்னர் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். 'மூடா' முறைகேடு தொடர்பாக, காங்., மேலிட தலைவர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நான் தவறு செய்யவில்லை என்பதால், கவர்னரின் நோட்டீசுக்கு பயப்பட மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Thirumalaimuthu L
ஆக 03, 2024 18:07

மனைவி பெயருக்கு 14 வீட்டுமனைகளை அடி மாட்டு விலைக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்திட்டு என்ன தெனாவட்டுல யோக்கியர் போல் கூவும் ஒரு மாநில முதல்வர். வெட்கம் ?


Swaminathan L
ஆக 03, 2024 12:53

ஆளுநர் அவரது பதவிக்குள்ள அதிகாரம் மற்றும் அவரது நியமனப் பொறுப்புக்கு உட்பட்டே இந்த ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு நிர்வாக ரீதியாக பதில் அனுப்ப வேண்டிய கடமை மற்றும் பொறுப்பு சித்தராமையாவுக்கு இருக்கிறது. மற்றபடி, பொதுவெளியில் அரசியல் கண்டனம் செய்ய அவருக்கு சலுகை இருக்கிறது.


ஆரூர் ரங்
ஆக 03, 2024 10:51

ஏற்கனவே சொந்த வீடு உள்ளவருக்கு இன்னும் 24 மனைகள் என்பது நேரு இந்திரா வழி ஸோசலிசம்.


Venkateswaran Rajaram
ஆக 03, 2024 09:16

நீங்கள் பிரதமரையே கைப்பாவையாகத்தான் வைத்திருந்தீர்கள்


Kasimani Baskaran
ஆக 03, 2024 05:56

ஒரு ஆளுக்கு இந்தனை மனைகளா - திராவிட மன்னர்கள் போல பல வீடு என்பது மகா மட்டமான ஐடியா என்பது இவர்களுக்கு தெரியாதது துரதிஸ்டவசமானது...


cbonf
ஆக 03, 2024 04:19

o நமது சுப்ரீம் கோர்ட் மற்றும் உயர் நீதிமன்றங்களில் உள்ள பெரும்பாலான நீதிபதிகள் ஊழல்வாதிகள் o அகஸ்டா ஊழல் வழக்கில் லஞ்சம் கொடுத்தவர்களை இத்தாலி நீதிமன்றம் ஏற்கனவே தண்டித்துள்ளது. o ஆனால் ஊழல் செய்த தாய்-மகன் இருவரை நமது ஊழல் நீதிமன்றங்கள் இன்னும் தண்டிக்கவில்லை


cbonf
ஆக 03, 2024 04:15

o நமது சுப்ரீம் கோர்ட் மற்றும் உயர் நீதிமன்றங்களில் உள்ள பெரும்பாலான நீதிபதிகள் ஊழல்வாதிகள் o நேஷனல் ஹெரால்டு ஊழலில் நேரடி ஆவண ஆதாரங்கள் இருந்தபோதிலும், தாய் மகன் இரட்டையர்கள் இன்னும் சுதந்திரமாக உலாவுகிறார்கள். o நமது ஊழல் நீதிபதிகள் அவர்களைக் கைது செய்யத் தவறிவிட்டனர்


cbonf
ஆக 03, 2024 04:10

மாநில மக்களை கொள்ளையடித்து - முதல்வரின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பகல் கொள்ளைக்கு நேரடி ஆவண ஆதாரம் உள்ளது இது போன்ற கொள்ளைக்கார முதல்வரை உடனே டிஸ்மிஸ் செய்து கைது செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை