| ADDED : மார் 25, 2024 06:36 AM
விஜயபுரா: விஜயபுராவில், ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கர்னாடக பாடகி சாக் ஷி ஹிரேமத், தேர்தல் துாதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களிடம் ஒட்டு போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பிரபலங்கள் துாதர்களாக நியமிக்கப்படுவர். அதுபோன்று விஜயபுராவில், தேர்தல் துாதராக பாடகி சாக் ஷி ஹிரேமத் நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:தேர்தலை ஒட்டி மாவட்ட தேர்தல் துாதராக பணியாற்ற தயாராக இருப்பதாக கூறி, என்னை பற்றிய தகவல்கள், நான் பெற்ற விருதுகள் விபரங்களை அனுப்பியிருந்தேன். நான் தேர்தல் துாதராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை என்னால் நம்பவே முடியவில்லை. பாடகியான நான், தேர்தலில் இசை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த தயாராகி வருகிறேன்.இளைஞர்களிடம், ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியமாகும். என்னை தேர்ந்தெடுத்த மாவட்ட பஞ்சாயத்து, மாவட்ட நிர்வாகம், தேர்தல் அதிகாரிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அத்துடன், நானும் முதல் முறையாக இத்தேர்தலில் ஓட்டு போடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.