உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடைத்தேர்தலில் சிவகுமார் போட்டியா?

இடைத்தேர்தலில் சிவகுமார் போட்டியா?

பெங்களூரு, : ''சென்னப்பட்டணா இடைத்தேர்தலில், துணை முதல்வர் சிவகுமார் போட்டியிடுவது குறித்து எனக்கு தெரியாது,'' என, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மாநில அரசின் கோரிக்கைப்படி, 'அன்னபாக்யா' திட்டத்துக்கு அரிசி வழங்கட்டும். அரிசிக்கு கொடுக்க மாநில அரசிடம் பணம் உள்ளதா, இல்லையா என்பது தெரியும்.லோக்சபா தேர்தலுக்கு முன்பு, கிலோவுக்கு 29 ரூபாய் வீதம், 'பாரத் அரிசி' திட்டத்தை செயல்படுத்தினர். ஓட்டுப்பதிவு முடிந்த பின், திட்டத்தை நிறுத்தினர். இது பற்றி மத்திய அமைச்சர் பேசட்டும்.பொறுப்பான பதவியில் இருப்பவர், மாநில அரசுக்கு எதிராக அலட்சியமாக பேசுவது சரியல்ல. ஊடகத்தினர் முன்னிலையில் பா.ஜ., தலைவர்கள் பேசுகின்றனர். முதலில் அரிசி வழங்கட்டும். அதன்பின் பணத்தை பற்றி பேசட்டும்.மூன்று சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் குறித்து, முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். சென்னப்பட்டணாவில், சிவகுமார் போட்டியிடுவது குறித்து எனக்கு தெரியாது. ராம்நகர் மாவட்டத்தின் பெயர் மாற்றம் குறித்து, நாங்கள் ஆலோசிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜூலை 10, 2024 08:03

மத்திய அரசின் பாரத் அரிசி பாரத் பருப்பு திட்டமும் ஏழைகளுக்கானது அல்ல. அது முற்பட்ட வகுப்பினர்களுக்கானது என்பதால் அத்திட்டம் பரவலாக்கப்படவில்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை