உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுலோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு கோழைத்தனமானது: பிரதமர் மோடி கண்டனம்

சுலோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு கோழைத்தனமானது: பிரதமர் மோடி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சுலோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோ மீது தாக்குதல் நடத்தியுள்ளதற்கு, பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். சுலோவாக்கியா நாட்டின் பிரதமராக ராபர்ட் பிகோ உள்ளார். தலைநகர் பிரஸ்டில்லா நகரின் வடகிழக்கே ஹேண்ட்லோவா என்ற இடத்தில், நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பினர். அப்போது மர்ம நபர் பிரதமர் ராபர்ட் பிகோ மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் படுகாயமடைந்து கீழே விழுந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y5qj55xs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சுலோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோ மீது தாக்குதல் நடத்தியுள்ளதற்கு, பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராபர்ட் பிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் கண்டனத்துக்குரியது. இது கோழைத்தனமான தாக்குதல். இந்த கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். ராபர்ட் விரைவில் குணம் அடைய வேண்டும். சுலோவாக்கியா நாட்டு மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ