உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வட்டியில்லா கடனுக்கு வரி வங்கி ஊழியர்களுக்கு சிக்கல்

வட்டியில்லா கடனுக்கு வரி வங்கி ஊழியர்களுக்கு சிக்கல்

புதுடில்லி,: வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன், கூடுதல் சலுகையே. அதனால், அதற்கு வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வருமான வரித்துறை சட்டங்களின்படி, எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி நிர்ணயித்துள்ள கடன்களுக்கான வட்டி விகிதங்களே, அடிப்படையாக வைத்துக் கொள்ளப்படும். வங்கிகள், ஊழியர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கினால், அந்த அடிப்படை வட்டி விகிதத்தின் அடிப்படையில் வருமான வரி செலுத்தப்பட வேண்டும்.வருமான வரித்துறையின் இந்த சட்டப் பிரிவுகளை எதிர்த்து, சில வங்கி ஊழியர் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதை விசாரித்த நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா, திபாங்கர் தத்தா அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டிலேயே மிகப்பெரும் வங்கியாக உள்ளதால், எஸ்.பி.ஐ.,யின் வட்டி விகிதத்தை, அடிப்படையாக வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒருதலைப்பட்சமான முடிவு என்று எடுத்துக் கொள்ள முடியாது. சட்டப் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, இந்த கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.வங்கி ஊழியர்களுக்கான வட்டியில்லா அல்லது சலுகை வட்டியிலான கடன்கள் என்பது, அவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் சலுகையே. அதனால், இதற்கு வருமான வரி செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.அதாவது, எஸ்.பி.ஐ.,யின் அடிப்படை வட்டியைவிட, குறைந்த வட்டி அல்லது வட்டியில்லா கடன் வழங்கினால், இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்துக்கு, வங்கி ஊழியர்கள் வரி செலுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
மே 10, 2024 16:43

வங்கி ஊழியர்களுக்கு வட்டி இல்லாத கடன் எந்த வங்கியும் எனக்குத் தெரிந்த வரை வழங்குவது இல்லை!


chakravarthy sridharan
மே 10, 2024 13:22

இதற்கு பெயர் பெர்க்ஸ், சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோதே இருந்த சட்ட பிரிவு, தெரியாமல் பேசக்கூடாது


சுந்தரம் விஸ்வநாதன்
மே 10, 2024 10:45

கடன் என்பதை சற்று பின்னுக்குத்தள்ளி வேறு ஒரு உதாரணத்தைப்பார்க்கலாமே குறிப்பாக மின் உற்பத்தி நிலையங்கள் , தீயணைப்புத்துறை, , காவல் துறை நிலையங்கள், போன்ற இடங்களில் மணி நேரமும் ஊழியர்கள் பணியில் இருக்கவேண்டும் அவர்களுக்கு அரசு வீட்டு வசதி செய்து கொடுக்கிறது அந்த வீடுகளுக்கு வாடகை வசூலிப்பதில்லை ஆனால், ஆண்டு இறுதியில் வருமானவரி கணக்கிடும்போது, வீட்டுக்கு வாடகையாக அடிப்படை சம்பளத்தில் பத்து சதவீதம் வருமானமாக கணக்கிடப்பட்டு அந்த தொகைக்கும் வருமானவரி கணக்கிடப்படுகிறது எனக்குத் தெரிந்து ஐம்பதாண்டுகளாகவே இந்த முறை இருக்கிறது அதுபோலத்தான் வங்கி ஊழியர்களுக்கும் அரசு முடிவு சரியே


Kasimani Baskaran
மே 10, 2024 05:44

ஊழியர்களுக்கு வங்கி காட்டும் சலுகைக்கு எப்படி வரி விதிக்க முடியும்? சிதம்பரம் செ வாக இருந்தால் இந்நேரம் வங்கி ஊழியர்கள் வட்டியில்லாமல் ஒவ்வொரு மாதமும் கடன் வாங்கி திரும்ப கட்டிவிட்டால் வருமான வரி கிடையாது என்று ஒரு அரசாணை வெளியிட்டு பிரச்சினையை தீர்த்திருப்பார்


இறைவி
மே 10, 2024 05:29

தனியார் நிறுவனங்களில் வெகு காலமாக இருக்கும் நடைமுறை. தொழிலாளிக்கு கொடுக்கப்படும் வட்டியில்லா கடனுக்கு, வங்கி வட்டி விகிதத்தில் கணக்கிட்டு, அந்த வட்டி தொகை தொழிலாளியின் வருமானமாக கணக்கிடப்படும். அந்த கற்பனை வருமானத்துக்கு வருமான வரி பிடிக்கப் படும். அது போலவே, வாடகை வீட்டிற்கு கம்பெனியால் கொடுக்கப்படும் டெபாசிட் தொகைக்கும் வட்டி கணக்கிட பட்டு வருமான வரி பிடித்தம் செய்யப் படும். இது அநியாயமாக தோன்றினாலும், வருமான வரி இல்லையென்றால் பல நிறுவனங்கள் தொழிலாளிக்கு சம்பளத்தை முழுதும் பணமாக கொடுக்காமல் இது போன்று இலவச சௌகரியங்களாக கொடுக்க ஆரம்பிப்பார்கள்.


J.V. Iyer
மே 10, 2024 04:22

அப்படி போடு அரிவாளை


கத்தரிக்காய் வியாபாரி
மே 10, 2024 01:13

வெளிநாடுகளில் வருமான வரி துறை அங்கீகரிக்காத எந்த சலுகை குடுத்தாலும் அதற்க்கு வரி கட்ட வேண்டும் சலுகை என்பது சாதாரண பொதுமக்கள் குடுக்கும் வரிப்பணதில்தான் கொடுக்கப்படுகிறது


தாமரை மலர்கிறது
மே 09, 2024 23:27

வங்கி ஊழியர்களுக்கு மட்டும் வட்டியில்லாத கடன் கொடுப்பது தவறு அப்படியே கொடுத்தால், அதற்கு வரி போடுவது சரியே


J.Isaac
மே 10, 2024 08:00

சரியே


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ