உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவில் அர்ச்சகர் துாக்கிட்டு தற்கொலை  

கோவில் அர்ச்சகர் துாக்கிட்டு தற்கொலை  

மங்களூரு : கோவில் அர்ச்சகர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.உத்தர கன்னடாவின் சிர்சியை சேர்ந்தவர் விஜய் ஹெக்டே, 33. தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி சவனாலு கிராமத்தில் உள்ள, துர்கா காளிகாம்பா கோவில் அர்ச்சகராக இருந்தார். கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆண் குழந்தை பிறந்தது. மனைவியும், குழந்தையும் மாமியார் வீட்டில் இருந்ததால், விஜய் ஹெக்டே தனியாக வசித்தார்.நேற்று முன்தினம் காலையில் இருந்து, விஜய் கோவிலுக்கு வரவில்லை. இதனால் அவரது மொபைல் போனுக்கு, பக்தர்கள் அழைத்தனர். போனை எடுத்து பேசவில்லை. சந்தேகம் அடைந்த பக்தர்கள், விஜய் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது, துாக்கில் தொங்கியது தெரியவந்தது. பெல்தங்கடி போலீசாரின், முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்தது தெரிந்தது. விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Velan Iyengaar
மே 07, 2024 07:43

நாட்டில் அறமற்ற அர்ச்சகர்களும் நிறைய பேர் இருக்கின்றனர் அறமுள்ள அர்ச்சகர்களும் சில பேர் இருக்கின்றனர் அறம் குறையும்போது கலி முற்றுகிறது என்று அர்த்தம்


jayvee
மே 08, 2024 07:14

கலிகாலம் முற்றியதின் வெளிப்பாடுதான்


Kachada
மே 07, 2024 05:45

அவருக்கு என்ன பிரச்சனையோ ? ஆனால் இங்கே மனிதாபிமானம் இல்லாமல் ஹிந்துக்களும் ஹிந்து பெயரில் பிற மதத்தினரும் செய்யும் கமெண்ட் பார்த்தால் மனம் பதைக்கிறது இப்படி கூட ஜென்மங்களா நாளை என்று ஒன்று உண்டு என்பதை மறந்து சிரிக்கிறார்கள்


vaiko
மே 06, 2024 22:08

இவருக்கு இருக்கும் தைரியம் ஏன் சிதம்பரம் தீக்ஷதர்களுக்கு வரமாட்டேன் என்கிறது?


Bala
மே 09, 2024 06:50

இப்படி ஒரு கருத்தை தெரிவிப்பதற்கு ஒனக்கு யார் கொடுத்த தைர்யம்?


Narayanan
மே 09, 2024 15:34

சாதாரணமாக இவர்களுக்கு இந்த எண்ணமே வராது


Natchimuthu Chithiraisamy
மே 06, 2024 16:59

மனைவி குழந்தைகள் எங்குபோவார்கள் என்பதை அர்ச்சகர் யோசிக்கவில்லை


GANESUN
மே 06, 2024 14:25

தான் பூஜை செய்யும் சாமி மேலயே நம்பிக்கை இல்லாதவர், அடுத்தவருக்கு நம்பிக்கையை எப்படி கொடுக்க முடியும்


ஜெய்ஹிந்த்புரம்
மே 06, 2024 15:14

கடவுளுக்கு இது தெரியுமோ?


சிந்தனை
மே 06, 2024 12:03

அர்ச்சகர்களின் சிறிய வருமானத்திற்குள் திருமணம் குழந்தைகள்... என்றால் எப்படி வாழ முடியுமோ.. தெரியலை...


ஜெய்ஹிந்த்புரம்
மே 06, 2024 15:13

படிச்சு நீட் பரீட்சை பாஸ் பண்ணி டாக்டர் ஆகியிருக்கலாமே ? யார் வேண்டாம்ன்னாங்க ?


Bala
மே 09, 2024 06:48

பல கோவில்களில் பல அர்ச்சகர்களுக்கு சிறிய வருமானமும் இல்லை இருந்தாலும் இது தெய்வப்பணி என்பதால் காலம் காலமாக அர்ச்சகர்கள் அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார்கள்


மேலும் செய்திகள்