உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதி துப்பாக்கி சூடு: சி.ஆர்.பி.எப்., வீரர் வீரமரணம்

பயங்கரவாதி துப்பாக்கி சூடு: சி.ஆர்.பி.எப்., வீரர் வீரமரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் வீரமரணம் அடைந்தார்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள கிராமம் மோங்பங்க். இங்கு நேற்று காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை நோக்கி பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் பீஹாரை சேர்ந்த போலீஸ்காரர் அஜய் குமார் ஷா, 43, மற்றொரு போலீஸ்காரர் காயம் அடைந்தனர். இதையடுத்து தலையில் காயம் அடைந்த ஷா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். காயம் அடைந்த மற்றொரு போலீஸ்காரர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ