| ADDED : ஆக 12, 2024 07:11 AM
* இது யார் குற்றம்?பொன்னகரில் ரெண்டாவது முறையாக ஓட்டுகளை ஏலம் எடுத்த மகராசியின் சேவையின் வரை படத்தில் பில்டிங்குகள் உருவாக்கி வருவது தான் சாதனை. பில்டிங்குகள் மட்டும் தான் தயார் செய்றாங்களே தவிர, ஆனால், ஏழைகளுக்கு இன்னும் உரிய மருத்துவ வசதிக்கு 'டாக்டர்' கிடைக்கலையே.பிரமாண்ட மினி விதான் சவுதா கட்டடம் உருவானது. அதில், சில துறைகள் இன்னமும் இடம் பெறவில்லை. இந்த பட்டியலில் மலிவு விலை உணவக பில்டிங் ரெடி. ஆனால், பயனுக்கு வரலை.பெரும்பாலான பட்டியல் வகுப்பினர் வாழும் தொகுதியில் ஒரே ஒரு இடத்தில் கூட மலிவு விலை உணவகம் ஏற்படுத்தாதது அரசோட குற்றமா அல்லது கேட்டு பெறாதவர் தகுதியின்மையா. யாரோட குற்றம். தெரிந்தால் சொல்லுங்களேன்.----* உள்ளூருக்கு கிடைக்குமா?கோல்டன் கிராமத்தில் தொழிற்சாலைகள் உருவாக்க நிலம் கையகப்படுத்தியதற்கான அடையாளத்தை காட்ட பெயர் பலகையை நிறுவிட்டாங்க. ஆனால், அங்கு என்னென்ன தொழிற்சாலை வரப் போகுதோ. வெளிநாட்டு கம்பெனியா, வெளிமாநில கம்பெனியா.இதில் வேலையாவது உள்ளூர் யூத்துகளுக்கு கிடைக்க 'கியாரண்டி' கிடைக்குமா? அதுக்கும் வெளியிலிருந்து வரவழைத்து, உள்ளூரு காரங்களை ஒதுக்கிடுவாங்களா. ஏற்கனவே, பெமலில் உள்ளூர்காரர்களுக்கு வேலை தரலையே என்ற நெருப்பு எரியுது. இது இன்னமும் அணையல. புது புது பேக்டரிகள் என்ன சொல்ல போகுதோ.-------------* உடைபடுமா தடை?லிட்டில் இங்கிலாந்து பேருக்கு ஏத்தாப்புல நகரத்துக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பையும் தங்கமான நகருக்கு வெள்ளைக்காரங்க ஏற்படுத்தி கொடுத்தாங்க. ஆனால், அவங்களால் உருவாக்கப்பட்ட பே.மங்களா நீர்தேக்கத்தில் இருந்து குடிநீர் கிடைக்க விடாமல், வழிமறித்து தடுத்து நிறுத்தியதற்கு தானா சுதந்திரம் பிறந்தது.பேத்தமங்களாவில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை உருவானது யாருக்காக. கங்கையும், காவிரியும் பாய்கிற நாட்டில், குடிநீருக்காக பாலாறு பாய்ந்து வந்ததையும் தடை போட்டாங்களே. இது, யாரால் தீர்க்கப்படுமோ.------* தொலைநோக்கு எங்கே?புற்றுநோய் ஏற்பட்டவங்களுக்கு கோலார் நகரத்தில் மருத்துவ வசதியே இல்லை. பணம் படைத்தவங்க, டாப் சிட்டிகளில் பல சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகளில், சேத்து வச்ச பணத்தை எல்லாம் கொட்டி செலவிட தயங்க மாட்டாங்க. அதுவே, ஏழையா இருந்தால், விதியுடன் விளையாட முடியாமல் நாட்களை எண்ண வேண்டியது தான்.இது போல, மாரடைப்பு ஏற்பட்டாலும், மரணம் அழைக்கிறது என்றே தான் அர்த்தமாகுது. கோல்டு சிட்டியில், இதற்கெல்லாம் மருத்துவ வசதிகள் கிடைக்க, என்ன தவம் செய்யணுமோ.அதிகாரத்தில் இருந்தவங்க தொலைநோக்கு பார்வையை செலுத்த தவறினர்; இனியாவது அதிகாரத்துக்கு வருவோர் யோசிக்க வேணும்னு பாதிக்கிறவங்க வருந்துறாங்க.***