உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., நிறுவனத்துக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் நன்றி

ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., நிறுவனத்துக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் நன்றி

ஹலசூரு: முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு உதவிய ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., கல்வி நிறுவனத்துக்கு, முன்னாள் மாணவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பெங்களூரு ஹலசூரு அண்ணாசாமி முதலியார் சாலையில் உள்ள ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., முதல் நிலை கல்லுாரி அரங்கில், முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, இம்மாதம் 19ம் தேதி நடந்தது.இது குறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் மாணவர்கள் சங்க பொருளாளருமான கு.வரதராசன் கூறியதாவது:நிகழ்ச்சிக்கு, 1993ல் ஓய்வு பெற்ற, 89 வயது நிரம்பிய முன்னாள் ஆசிரியை சீலிபாய் எட்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவர், தமிழ், கணிதம் வகுப்புகளை நடத்தியவர். மேலும், 1952ல் எஸ்.எஸ்.எல்.சி., முடித்த மூத்த முன்னாள் மாணவர் 92வயது எஸ்.ஆர்.விஜயராகவன் முதல் 2021ல் படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.முதன் முயிற்சியே எதிர்பார்த்ததை விட மிகவும் நல்ல முறையில் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்களுக்கும்; நிகழ்ச்சிக்கு உதவிய கல்வி நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்து கொள்கின்றோம்.எங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட போது, இன்னும் மாணவராக இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை