உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதி என சந்தேகம் சமையல்காரர் சுட்டுக்கொலை

பயங்கரவாதி என சந்தேகம் சமையல்காரர் சுட்டுக்கொலை

சம்பா: ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில், சந்தேகத்துக்குரிய நடமாட்டத்தை கவனித்த எல்லை பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சமையல்காரர் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ரீகல் போலீஸ் ஸ்டேஷன் அருகே, நேற்று முன்தினம் இரவு, சந்தேகத்துக்குரிய வகையில் ஒருவர் சுற்றித் திரிவதை, எல்லை பாதுகாப்புப் படையினர் கவனித்தனர். அவர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், எல்லை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால், உயிரிழந்தவர், ஜம்மு மாவட்டத்தின் அக்னுார் பகுதியைச் சேர்ந்த வாசுதேவா என்பதும், அவர் எல்லைப் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தில் சமையல்காரராகப் பணிபுரிந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரிந்தர் சவுத்ரி கூறுகையில், ''விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது. சந்தேகத்துக்குரிய நடமாட்டத்தை எல்லை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர். ''அந்த நபர் பயந்து ஓடியதால், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்,'' என்றார். உயிரிழந்த வாசுதேவா குடும்பத்தினருக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை