உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நகைக்கடையில் கொள்ளை முக்கிய குற்றவாளி கைது

நகைக்கடையில் கொள்ளை முக்கிய குற்றவாளி கைது

ரோகினி: தெலங்கானா நகைக்கடையில் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த நபரை டில்லி போலீசார் கைது செய்தனர்.கடந்த 2023 டிசம்பர் 1ல், தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் ஒரு கும்பல் துப்பாக்கிமுனையில் நான்கு கிலோ தங்கம், பணத்தை கொள்ளையடித்தது. சம்பவத்தின்போது, கொள்ளையர்கள் சுட்டதில், இரண்டு நகைக்கடைக்காரர்களுக்கு குண்டடி காயங்கள் ஏற்பட்டன.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொள்ளையர்கள் டில்லியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.தெலங்கானா போலீசார், டில்லிக்கு வந்தனர். டில்லி போலீஸ் உதவியுடன் கொள்ளைக்கும்பல் பதுங்கியிருந்த ரோகினி செக்டார் 34 பகுதியை சுற்றி வளைத்தனர். முக்கிய குற்றவாளியான சுமித் தாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.சுமித், 2019ல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பரோலில் விடுதலையான அவர், தெலங்கானா சென்று உறவினர்கள் வீட்டில் பதுங்கியுள்ளார். அப்போது அவர்களுடன் இணைந்து நகைக்கடையில் கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ