உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கத்தியால் கழுத்தை அறுத்து நண்பரை கொன்றவர் கைது

கத்தியால் கழுத்தை அறுத்து நண்பரை கொன்றவர் கைது

ஸ்ரீராமபுரம், : பணத்தகராறில் கத்தியால் கழுத்தை அறுத்து, ஹோட்டல் உரிமையாளரை கொன்ற நண்பர் கைது செய்யப்பட்டார்.பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தில் வசித்தவர் குமார், 36. ஹோட்டல் நடத்தி வந்தார். இவரது நண்பர் தயாள், 40. இவர் வட்டி தொழில் நடத்தினார்.தயாளிடம் இருந்து குமார், 50 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கடனை திரும்ப கொடுக்கவில்லையாம்.ஹோட்டல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனை கொடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளார். இதனால் நண்பர்களிடையில் தகராறு ஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவு குமாரும், தயாளும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் குமாரின் கழுத்தை அறுத்து தயாள் கொலை செய்துள்ளார். நேற்று காலை கைது செய்யப்பட்டார். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை