உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர் நடத்திய கூட்டம்  துாங்கி வழிந்த எம்.எல்.சி.

அமைச்சர் நடத்திய கூட்டம்  துாங்கி வழிந்த எம்.எல்.சி.

ராய்ச்சூர் : அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.சி., வசந்தகுமார் துாங்கி வழிந்ததால், அதிகாரிகள் சிரித்தனர்.ராய்ச்சூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரம் கையிருப்பு உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து, ராய்ச்சூர் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில், கர்நாடக மருத்துவ கல்வி அமைச்சரும், ராய்ச்சூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சரணபிரகாஷ் பாட்டீல் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.சி., வசந்தகுமார், முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். அமைச்சர் ஆலோசனையின் போது, வசந்தகுமார் துாங்கி வழிய ஆரம்பித்தார். இதனை ஊடகங்கள் வீடியோக்கள் எடுத்ததும் அருகில் அமர்ந்திருந்தவர், வசந்தகுமாரை எழுப்பி விட்டார். இதை பார்த்து கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் சிரித்தனர்.வசந்தகுமார், சமீபத்தில் தான் மேலவை தேர்தலில் எம்.எல்.ஏ.,க்கள் மூலம் எம்.எல்.சி.,யானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை