உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்டப்பகலில் ரவுடி கொலை

பட்டப்பகலில் ரவுடி கொலை

சேஷாத்திரிபுரம்: பட்டப்பகலில் ரவுடியை, மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது.பெங்களூரு, சேஷாத்திரிபுரத்தின் ரிசால்தார் தெருவில் வசித்தவர் அஜித், 28. இவர் சேஷாத்திரிபுரம் போலீஸ் நிலைய ரவுடி பட்டியலில் இருந்தார்.இவர், நேற்று மாலை, 4:15 மணியளவில் வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது திடீரென வந்த மர்ம கும்பல், அஜித்தை இரும்பு கம்பியால் அடித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டும் தப்பியோடினர்.இதில் காயமடைந்த அஜித், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.தகவலறிந்து அங்கு வந்த சேஷாத்திரிபுரம் போலீசார், விசாரணையை துவங்கினர். சுற்றுப்புற ரோடுகளின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.முன் விரோதம் காரணமாக, எதிரி கும்பல் இந்த கொலையை செய்திருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை