உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துக்காராம், தத்தல் ராஜினாமா ம.ஜ.த., வலியுறுத்தல்

துக்காராம், தத்தல் ராஜினாமா ம.ஜ.த., வலியுறுத்தல்

பெங்களூரு: 'வால்மீகி மேம்பாட்டு ஆணைய தலைவர் பசனகவுடா தத்தல் மற்றும் பல்லாரி காங்., - எம்.பி., துக்காராம், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, ம.ஜ.த., வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக, ம.ஜ.த., செயல் தலைவர் ராஜு நாயக் கூறியதாவது:வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் பணத்தை, தேர்தலுக்கு செலவிட்டுள்ளனர். வால்மீகி சமுதாயத்தின் மீது, எம்.பி., துக்காராமுக்கு அக்கறை, அன்பு இருந்தால், உடனடியாக தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ராஜினாமா செய்யா விட்டால், அந்த சமுதாயத்தினருடன் ஒருங்கிணைந்து, ம.ஜ.த., தொடர் போராட்டம் நடத்தும்.லோக்சபா தேர்தலில் கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்கும்படி, அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு, முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவரும் இலக்கு நிர்ணயித்தனர். இவர்களின் உத்தரவை நிறைவேற்ற, அமைச்சராக இருந்த நாகேந்திரா, வால்மீகி மேம்பாட்டு ஆணைய பணத்தை, தேர்தலில் பயன்படுத்தினார்.இந்த முறைகேடு தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு கட்சி சார்பில் புகார் அளிப்போம். வால்மீகி மேம்பாட்டு ஆணைய தலைவர் பசனகவுடா தத்தல், தான் எந்த தவறும் செய்யவில்லை என, கூறி கொண்டு தற்போது எஸ்.ஐ.டி.,யிடம் சரண் அடைந்துள்ளார். கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்பதால், இவரிடம் முதல்வரும், துணை முதல்வரும் ராஜினாமா பெறவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை