மேலும் செய்திகள்
டார்ஜிலிங்கில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
1 hour(s) ago
காசோலையில் எழுத்துப்பிழை: ஆசிரியர் சஸ்பெண்ட்
1 hour(s) ago
ம.பி.,யில் இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் கைது
1 hour(s) ago
மும்பை : மஹாராஷ்டிராவின் மும்பையில் விளம்பர பலகை சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.மஹாராஷ்டிராவின் மும்பையில் கடந்த 13ம் தேதி மாலை சூறாவளிக் காற்று வீசியது. அப்போது, காட்கோபர் பகுதியின் சேதா நகர் என்னும் இடத்தில் பெட்ரோல் பங்கை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த 120 அடி உயரம், 120 அடி அகலம் உடைய பிரமாண்ட விளம்பர பலகை சரிந்து விழுந்தது. பலகையை தாங்கி பிடித்த இரும்பு கம்பிகள், சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தன. இந்த விபத்தில், 100க்கும் மேற்பட்டோர் விளம்பர பலகையின் அடியில் சிக்கிக் கொண்டனர். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 89 பேர் மீட்கப்பட்டனர். இதில், 14 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.கடந்த இரண்டு நாட்களாக, 40 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புப்பணி தொடரும் நிலையில், மேலும் இருவரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
மீட்புப் பணியில் இருந்த தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்பதால், உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. விபத்து நடந்த இடத்தின் அருகிலேயே பெட்ரோல் பங்க் இருப்பதால் வெல்டிங், கட்டிங் கருவிகளை பயன்படுத்தவில்லை. இதனாலேயே மீட்புப் பணியில் தாமதம் நிலவுகிறது. கனரக இயந்திரங்களை வைத்தே இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. விளம்பரப் பலகை அடியில் சிக்கிய வாகனத்தில் இருந்து பெட்ரோல் கசிந்ததால், சிறிய தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், அதுவும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago