| ADDED : ஜூன் 08, 2024 04:34 AM
சாம்ராஜ் நகர் : கடனாக வாங்கிய 2,000 ரூபாயை திரும்ப தராததால், வாலிபரை அடித்து கொன்ற நண்பர், அவருக்கு உடந்தையாக இருந்தவர் கைது செய்யப்பட்டனர்.சாம்ராஜ்நகரின் குண்டுலுபேட்டில் வசித்தவர் மாதப்பா, 30. டீக்கடை நடத்தினார். சில மாதங்களுக்கு முன், நண்பரான மல்லப்பா, 29 என்பவரிடம் 2,000 ரூபாய் கடன் வாங்கினார். ஆனால் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் இருவர் இடையிலும், அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த மாதப்பாவை, மல்லப்பா வெளியே அழைத்து சென்றார்.ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில், இருவரும் மது அருந்தினர். குடிபோதையில் 2,000 ரூபாய்க்காக, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மாதப்பாவை பிடித்து சரமாரியாக தாக்கியதுடன், அவரை பிடித்து மல்லப்பா, தள்ளிவிட்டார். படுகாயம் அடைந்த மாதப்பா இறந்தார்.அதிர்ச்சி அடைந்த மல்லப்பா, இன்னொரு நண்பரான ரமேஷ், 30 என்பவரை, கொலை நடந்த இடத்திற்கு அழைத்தார். இருவரும் சேர்ந்து மாதப்பா உடலை, சாலையில் போட்டு விட்டு தப்பினர். தலைமறைவாக இருந்த இருவரையும், நேற்று மாலை குண்டுலுபேட் போலீசார் கைது செய்தனர்.