உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.300 நகையை ரூ.6 கோடி கொடுத்து வாங்கிய அமெரிக்க பெண்: ஜெய்ப்பூரில் நடந்த கூத்து

ரூ.300 நகையை ரூ.6 கோடி கொடுத்து வாங்கிய அமெரிக்க பெண்: ஜெய்ப்பூரில் நடந்த கூத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் ரூ.300 மதிப்புள்ள போலி நகைகளை ரூ.6 கோடிக்கு வாங்கியுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.அமெரிக்காவைச் சேர்ந்தவர் செரிஷ். இவர், கடந்த 2022ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கவுரவ் சோனி என்பவருடன் இன்ஸ்டாகிராமம் மூலம் அறிமுகமாகியுள்ளார். கவுரவ் சோனி, தாம் ஜெய்ப்பூரில் தங்க நகைக்கடை வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i16smjqh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0செரிஷ் அவரிடம் தங்க நகைகள் வாங்க முயன்றுள்ளார். இதையடுத்து, சோனியிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை ரூ.6 கோடிக்கு செரிஷ் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.300 தான்.இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியில் நகைகள் காட்சிப்படுத்தப்பட்டபோது, ​​அது போலியானது எனத் தெரியவந்தது. அவர் உடனே ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு வந்து கவுரவ் சோனியிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால் சோனி நீங்க யாரு என அமெரிக்க பெண் செரிஷ் இடம் கேட்டுள்ளார். நீங்கள் என்னிடம் தங்க நகைகள் வாங்க வில்லை என சோனி தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதரக அதிகாரிகளின் உதவியை செரிஷ் நாடினார். அவர்களின் ஆதரவுடன் ஜெய்ப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாக உள்ள கவுரவ் சோனி மற்றும் அவரது தந்தை ராஜேந்திர சோனியை தேடி வருகின்றனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஜூன் 12, 2024 07:16

நமது வடக்கன்ஸ் புகழ் திக்கெட்டும் பரவுகிறது!


Kumar Kumzi
ஜூன் 12, 2024 08:24

நம்பிள் உலகப்புகழ் ஊழல் விஞ்ஞானி கட்டுமரத்தை விடவா ஹாஹாஹா


Svs Yaadum oore
ஜூன் 11, 2024 18:51

இந்த செய்தியே நம்பும் படி இல்லை ....6 கோடி ரூபாய்க்கு நகைகள் வாங்குபவர் கொஞ்சம் கூட தங்கம் எத்தனை காரட் என்று ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே வாங்குவரா ??....இதில் வேறு எதோ விஷயம் உள்ளது ...


ThamizhMagan
ஜூன் 11, 2024 22:34

வேறு ஏதோ விஷயம் என்ன, அதுதான் அந்த அமெரிக்க பெண்மணி ஏற்கனவே தங்க நகை கடைக்காரர் கவுரவ் சோனியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆனவர் என்று செய்தி சொல்கிறதே மண் குதிரையை நம்பி நட்டாற்றில் இறங்கி விட்டார்


ThamizhMagan
ஜூன் 11, 2024 18:37

அமெரிக்க "அறிவுக்கொழுந்து" ரசீது வைத்திருக்கிறாரா, அதுவும் இல்லையா? பொதுவாக வெளிநாட்டவர்கள் credit card -ஐ தான் உபயோகிப்பார்கள். அதன் மூலம் payment -ஐ நிறுத்தலாம். இவர் என்ன செய்தாராம்?


Gopalakrishna Kadni
ஜூன் 11, 2024 18:20

It gives enough bad name to our country. We should prove that we have a good law enforcing police to do the correction


Vathsan
ஜூன் 11, 2024 18:11

லோக்கல் இந்தியர்களே ஏமாந்து போகிறார்கள். வெளிநாட்டு பெண் கேட்கவா வேணும்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி